புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தம்பிகளின் உயிரைக் காப்பாற்ற சிங்கம் போல் களம் இறங்கிய ஆதி குணசேகரன்.. ஜெயிலர் பிஜிஎம் வேற, ஸ்கிரீன் கிழியுது

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தற்போது இல்லாததால் இவருடைய தம்பிகளின் நிலைமை கொஞ்சம் மோசமாகி விட்டது. என்னதான் அராஜகத்தின் உச்சக்கட்டத்தில் அட்டூழியம் செய்து வந்தாலும் ஒரு நேரத்தில் அடங்கி தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப கதிர் மற்றும் ஞானத்தின் நிலைமை மாறிவிட்டது.

அதாவது குணசேகரன் எங்கே இருக்கிறார் என்ற உண்மை இவர்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு சொல்ல மாட்டுக்காரங்க என்று சக்தி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த வகையில் போலீசார் இவர்களை விசாரிப்பதற்கு கூட்டிட்டு போய் இருக்கிறார்கள். அங்கே கதிரால் வாய வச்சிட்டு சும்மா இருக்காமல் வழக்கம்போல் போலீசாரிடமும் எகிறி இருக்கிறார்.

Also read: குணசேகரன் இல்லாததால் தம்பிகளை சீண்டிப் பார்க்கும் மருமகள்கள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்

அவர்கள் சும்மா விடுவாங்களா என்ன, உடனே அவங்க ஸ்டைலில் ட்ரீட்மென்ட் கொடுக்க தயாராகி விட்டார்கள். அந்த வகையில் போலீசாரிடம் செமத்தையாக கதிர் மற்றும் ஞானம் அடி வாங்குகிறார்கள். அதாவது இவர்கள்தான் சொத்துக்காக குணசேகரனை ஏதோ பண்ணி இருக்கிறார் என்பது போல் தற்போது மாற்றி விட்டார்கள்.

அந்த சந்தேகத்தின் படி போலீசார் இவர்களிடம் இருந்து உண்மையை வாங்குவதற்காக அடிதடி நடத்துகிறார்கள். இதை பார்ப்பதற்கு கதிர் மற்றும் ஞானத்திற்கு இதெல்லாம் தேவைதான் என்பது போல் தோன்றுகிறது. இன்னொரு பக்கம் பாவம் குணசேகரன் இருந்தால் இவர்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என்று இறக்கப்படவும் தோன்றுகிறது.

Also read: டபுள் மடங்கு சம்பளத்திற்கு ஓகே சொன்ன ஆதி குணசேகரன்.. கொட்டிக் கொடுக்க தயாரான சன் டிவி

இந்த நிலையில் தான் தம்பிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக சிங்கம் போல் களம் இறங்குகிறார் ஆதி குணசேகரன். அதுவும் சும்மாலாம் இல்ல, ஜெயிலர் பிஜிஎம் போட்டு, கர்ஜனை குரலுடன் ஸ்கிரீனே கிழியும் படி பக்கா மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இந்த சீனை பார்க்கும் பொழுது பலருக்கும் மெய்சிலிர்த்து போய்விட்டது.

இதோ வந்துட்டாரு இல்ல, எங்க தலைவர் கொடூரமான வில்லன் ஆதி குணசேகரன். சும்மா வாய்ஸ் கேட்டாலே அதிருதில்ல. இனி தான் ஆட்டமே வேற லெவல்ல சூடு பிடிக்க போகிறது. இவர் வந்ததால் இனி அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை என்னவாக மாறப்போகிறது என்பது தெரியவில்லை. அதே மாதிரி இந்த ஆதி குணசேகரனை, என்ன கெதிக்கு ஆளாக்கப் போகிறார்கள் என்பது தான் இனி வரப்போகும் சுவாரசியமான கதையாக இருக்கும்.

Also read: கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

Trending News