அப்பாவின் டார்ச்சர் தாங்கல.. சிக்காமல் சிட்டாய் பறந்த அதிதி சங்கர்

Actress Aditi Shankar: பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் தன்னுடைய மகள் அதிதி சங்கரை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என ஆசை ஆசையாய் படிக்க வைத்தார். ஆனால் அதிதி சங்கருக்கு டாக்டராக இருப்பதைவிட ஹீரோயின் ஆக மாற வேண்டும் என தன்னுடைய ப்ரொபஷனையே மாற்றிவிட்டார்.

விருமன் படத்தில் கார்த்திக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அதிதி சங்கர், அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களில் நடிப்பதற்கு அதிதி சங்கர் அவருடைய அப்பாவிடம் பல போராட்டங்களை செய்துதான் ஒத்துக்க வைத்திருக்கிறார்.

Also Readசிவகார்த்திகேயனோட ஜோடி போட அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது.. சீக்ரெட்டை போட்டுடைத்த பயில்வான்

ஏனென்றால் சங்கருக்கு அவருடைய மகள் சினிமாவிற்கு வருவது அவ்வளவாகவே விருப்பமில்லை. ஆனால் அதிதி சங்கர் இப்போது அப்பாவின் பேச்சை எல்லாம் மீறி முழு நேர நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்பொழுது விஷ்ணுவர்தன் தயாரிப்பில் முரளி பையன் அதர்வா தம்பியுடன் ஒரு படம் நடிக்கிறார். 

அவர் பெயர் ஆகாஷ், புதுமுகமாக அறிமுகம் ஆகிறார். அவருடன் கதாநாயகியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தாய்லாந்தில் ஒரு படத்தில் அதிதி சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார். இங்கே ஷூட்டிங் நடந்தால் தான் வீட்டில் டார்ச்சர் இருக்கும். அதனால் ஒரு மாதம் தாய்லாந்தில் சூட்டிங் என ஜாலியாக இருக்கிறார். 

Also Read: ஹீரோயினா, சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டா.? மாவீரனில் இருந்த இடம் தெரியாமல் போன அதிதி சங்கர்

இந்தப் படம் மட்டுமல்ல அடுத்ததாக செல்வராகவன் இயக்க இருக்கும் 7ஜி ரெயின்போ காலனி  படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதிதி சங்கரை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். ஆனால்  இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வாலுக்கு பதிலாக அதிதி சங்கர் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. 

இவ்வாறு தொடர்ந்து அதிதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு சங்கரின் மகள் என்ற காரணத்தினால் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது சங்கரை மேலும் டென்ஷன் ஏற்றுகிறது. அதற்கேற்றார் போல் அதிதி சங்கரும் மாவீரன் ரிலீசுக்கு பின்பு மறுபடியும் அப்பா கையில் சிக்கி விடாமல் அடுத்த படப்பிடிப்பிற்காக தாய்லாந்துக்கு சிட்டாய் பறந்து விட்டார்.

Also Read: நடிக்கிற படத்தில் முதல் அக்ரீமெண்ட்டே இதுதானா.? மாவீரன் பட பூஜையிலேயே பிட்டு போட்ட அதிதி சங்கர்