வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதிதி சங்கருக்கு வாரி இறைத்த சூர்யா.. முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா.?

அதிதி சங்கர் இயக்குனர் சங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகி இருக்கிறார்.

முதல் படத்திலேயே பெரிய நடிகருக்கு ஜோடியாக அவர் அறிமுகமாகி இருப்பது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிதி சங்கரின் வரவுக்கு பின்னர் சில நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் அதிதி சங்கர் முதல் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். இது பல நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குனரின் மகள் என்பதால் தான் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிவதாகவும் ஒரு பேச்சு திரையுலகில் அடிபட்டு வருகிறது.

மேலும் முன்னணி ஹீரோக்கள் அதிதியை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுவதற்கு பின்னால் ஒரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. என்னவென்றால் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் எப்படியாவது சங்கரின் இயக்கத்தில் நடித்து விடலாம் என்ற திட்டமும் நடிகர்களுக்கு இருக்கிறதாம்.

அதனால் தான் தற்போது முன்னணி நடிகர்களின் பார்வை அதிதி சங்கர் பக்கம் திரும்பி உள்ளது. இதன் மூலம் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாக இருக்கிறார். இந்நிலையில் சூர்யா விருமன் படத்திற்காக அதிதிக்கு கொடுத்த சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

பொதுவாக ஒரு ஹீரோயினுக்கு அறிமுக படத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்காது. ஆனால் சூர்யா அதிதி சங்கருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஷங்கரின் மகள் என்பதால் தான் அவருக்கு இப்படி ஒரு பலமான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவரைப் பற்றி காத்து வாக்கில் பேசப்பட்டு வருகிறது

Trending News