திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தோல்வியை மேடையில் ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்.. அதுக்குன்னு ஓவர் கான்ஃபிடன்ட் வேண்டாம் ப்ரோ

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரிதா மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Also Read : பிட்டுப்பட நடிகையுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. அத காப்பாத்திக்கோங்க என அபாய சங்கு ஊதியாச்சு

மேலும் நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. இந்த சூழலில் மாவீரன் மேடையில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது டாக்டர், டான் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அவர் நடித்து வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது படம் தோல்வி என்று ஒத்துக்கொள்ள பல நடிகர்கள் தயங்குவார்கள். இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் வெள்ளிப்படையாகவே பிரின்ஸ் படம் தோல்வி என்பதை ஒற்றுக்கொண்டுள்ளார்.

Also Read : பாலிவுட் ஹீரோயினுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் அனல் பறக்கும் அப்டேட்

அதாவது கடைசி படம் மிஸ் ஆயிடுச்சு, மன்னிச்சிடுங்க கண்டிப்பா இந்த தடவை மிஸ் ஆகாது நூறு சதவீத வெற்றி கன்ஃபார்ம் என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இதை பார்த்த பலரும் பிரின்ஸ் தோல்வி என்று ஒற்றுக்கொண்டது பெருமையான விஷயம் என்றாலும் ஓவர் கான்ஃபிடன்ட் இருக்கக் கூடாது என்று கூறிவருகிறார்கள்.

ஏனென்றால் எந்த படமும் வெளியாவதற்கு முன்பே 100% வெற்றி என்று சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்க கூடும். ஆனாலும் மாவீரன் படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read : சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பு.. விஸ்வரூப வளர்ச்சி அடைந்த வில்லன் நடிகர்

Trending News