வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

கிரிக்கெட் ஜாம்பவான்கள் 11 பேர் வந்தாலும் இந்தியா தான் ஜெயிக்கும்.. புத்தி வந்து திருந்திய அப்ரிடி

ஆரம்பத்தில் இருந்தே இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் இஷ்டத்துக்கு பேசி வந்தார்கள். தெருவில் விளையாடும் சிறுபிள்ளைகள் போல் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானம் மற்றும் ஒரே இடத்தில் ஆடியது. இதனால் எளிதாக வென்றது என கூறி வந்தனர்.

மேலும் பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல், முதல் சுற்றிலேயே வெளியேறியது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. இதனாலும் கொதித்துப் போயிருந்த அவர்கள் இந்திய அணியின் இந்த வெற்றியை இஷ்டத்துக்கு பேசி வந்தனர்.

ஆரம்பத்தில் அந்த நாட்டு முன்னாள் அதிரடி வீரர் சாகித் அப்ரிடி இந்தியாவின் வெற்றியை கீழ்த்தனமாக விமர்சித்து வந்தார். இந்திய அணி சிங்கங்கள் பெற்ற பிள்ளைகள் அல்ல மாறாக நரிகள் போல், பாகிஸ்தான் வராமல் துபாயிலேயே அனைத்து போட்டிகளையும் விளையாடி சாதித்து விட்டனர் என குறைகளை கூறினார்கள்.

ஆனால் இப்பொழுது அவருக்கு புத்தி தெளிந்தது போல் இந்தியாவை புகழ்ந்து தள்ளி வருகிறார். இந்திய அணி இந்த கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்கள். உலகத்தில் உள்ள 11 ஜாம்பவான் வீரர்களை கொண்டு வந்தாலும் இந்திய அணி இந்த தொடரை வென்றே இருக்கும். அவர்கள் அணியின் கட்டமைப்பு அப்படி என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளில் நல்ல கிரிக்கெட்டை வளர்க்க நிறைய முதலீடு செய்துள்ளனர். அதன்படி பல போட்டிகளை நடத்தி திறமையான வீரர்களை வளர்த்து வைத்துள்ளனர். இந்த அணியை பொறுத்தவரை துவக்க வீரர்கள், மிடில் ஆர்டர், பேட்ஸ்மேன்கள் அதன்பின் ஆல்ரவுண்டர்கள் என துல்லியமாக வீரர்களை கொண்டு வந்து அசத்தி விட்டனர் என பாராட்டி தள்ளுகிறார் அப்ரிடி.

Trending News