வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

18 வருடத்திற்கு பின் திரையில் மோதிக் கொள்ளும் ரஜினி, கமல்.. பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மோதல்

80களில் இருந்து இப்போது வரை ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் திரையில் போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் 60 வயதை கடந்தாலும் இப்போதும் கோலிவுட்டில் டாப் நடிகர்களாக இருப்பதற்கு காரணம் அவர்களது ரசிகர்களால் தான். இதற்காகவே வருடத்திற்கு ஒரு படத்தையாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினி, கமல் இருவரும் தரமான படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் இவர்கள் இருவரும் 18 வருடத்திற்கு பிறகு மறுபடியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் கோலிவுட்டே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமும் உலக நாயகன் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி பரபரப்பு ஏற்படுத்தியது.

Also Read: 90களில் அடுத்த கமல் என்று சொல்லப்பட்ட 3 ஹீரோக்கள்.. பெயரை கெடுத்து ரேஸில் இருந்து விலகிய நடிகர்

ஆனால் இந்த இரண்டு படங்களில் ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் தான் 500 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தது. அதே நேரம் கமலின் முன்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அதன்பின் ரஜினி, கமல் இருவரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கம் ஜெயிலர் படமும், கமலின் நடிப்பில் சங்கர் இயக்கம் இந்தியன் 2 படமும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியாகி தாறுமாறாக ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என்பதால், அதன் வசூல் ஜெயிலர் படத்தை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே பட குழு ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்திருக்கிறது.

Also Read: சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத ரஜினி.. பான் இந்திய படம் என்பதற்காக மட்டுமே செய்த சித்து வேலை

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் மோகன்லால் நடிக்கும் காட்சிகள் ராஜஸ்தான் மற்றும் ஜெய்ப்பூரில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அதேபோல் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

Also Read: ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த ரஜினி.. அந்த ஒரு வார்த்தையால் சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்

இந்தியன் படத்தின் முதல் பாகம் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததால் இந்த முறை ரஜினியுடன் கமல் பலமாகவே மோதுகிறார். ஆகையால் 18 வருடத்திற்கு முன்பு ரஜினியிடம் தோற்ற கமல், இப்போது வெற்றியை ருசிப்பதற்காகவே நேருக்கு நேர் மோதுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Trending News