ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பொருத்தம்-னா இப்படி இருக்கணும்.. காதலர்களாக ரசிகர்களை குதூகலப்படுத்திய 6 ஜோடிகள்!

வணக்கம் சினிமாபேட்டை ரசிகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போவது தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளாக விளங்கியவர்கள் பற்றி. இந்த கட்டுரையில் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த, மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திரை ஜோடிகளை காணலாம்.

விஜய் – சிம்ரன் : தளபதி விஜய் அவர்கள் ஆரம்பகாலங்களில் இடுப்பழகி சிம்ரன் உடன் 5 திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அதில் துள்ளாத மனமும் துள்ளும், ஒன்ஸ்மோர், பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. யூத் திரைப்படத்தில் விஜய் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சிறப்பித்து கொடுத்தார்.

அஜித் – நயன்தாரா : தல அஜித் குமார் அவர்கள் நயன்தாராவுடன் இணைந்து இதுவரை நான்கு படங்கள் நடித்துள்ளார். பில்லா திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார்கள், தொடர்ந்து ஏகன், ஆரம்பம், விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவற்றுள் ஏகன் படம் தவிர மற்ற மூன்று படங்களும் மாபெரும் ஹிட். தற்போது நயன்தாராவிற்கும் திருமணம் ஆகி விட இவர்களது ஜோடி மீண்டும் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சூர்யா – ஜோதிகா : ரியல் லைஃப் ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா திரையிலும் சிறப்பாக ஜொலித்த நட்சத்திரங்கள் ஆவார்கள். இவர்கள் இணைந்து நடித்த காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டானது நாம் அறிவோம். திரைக்கு அப்பாலும் இவர்கள் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஜோதிகாவும் அவ்வப்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் : சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இதுவரை 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அவற்றுள் ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் கெமிஸ்ட்ரி நமக்கு நல்லதொரு ஜோடியை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது சற்றே தனது பாதையை மாற்றி கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பார் என்று நம்பலாம்

விஜய் சேதுபதி – காயத்ரி : ‘ ப்பா யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு ‘ என்று விஜய் சேதுபதி கூற ஆரம்பித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்பட ஜோடியான விஜய் சேதுபதியும் காயத்ரியும் பிறகு ஐந்து படங்களில் நடித்துள்ளனர். இதில் மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் நடித்ததில் பெரும்பாலான படங்கள் நன்றாகவே போனது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இருவரும் நடித்திருந்த போதும் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி – ஹன்சிகா : ஜெயம் ரவி ஹன்சிகா ஜோடி அதிகம் பேசப்படாத ஒரு காம்பினேசன் ஆகும். இருவரும் இதுவரை மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அவற்றுள் எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரிய ஹிட். மூன்றாவது படமான போகன் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிய செந்தூரா… பாடலை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

Trending News