விக்ரம் திரைப்படத்தால் கமலின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் வசூலில் பல கோடி சாதனை படைத்தது. இப்படி ஒரு தரமான வெற்றியை எதிர்பார்க்காத பலருக்கும் விக்ரம் திரைப்படம் ஆச்சரியத்தை கொடுத்தது.
மேலும் கமல்ஹாசன் இதன் மூலம் கொஞ்சம் அல்ல நிறையவே காசு பார்த்து விட்டார். இதனால் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிப்பதற்கும், நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கிடப்பில் இருக்கும் ஒரு படம் மீண்டும் உருவாக இருக்கிறது.
Also read:கொண்டாட்டங்களுக்கு மூட்டை கட்டும் கமல்.. ஒவ்வொருத்தருக்கும் ஸ்கெட்ச் போடும் உலகநாயகன்
கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அவருடைய மகள் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் சபாஷ் நாயுடு என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாக இருந்த அந்த திரைப்படம் சில பல காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு கமல் அரசியலில் பிஸியாகி விட்டதால் இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதை பலரும் மறந்து விட்டனர். தற்போது அந்த படத்தை தான் லைக்கா நிறுவனம் தூசி தட்டி உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்காக லைக்கா கமலிடம் 26 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டார்களாம்.
Also read:விக்ரம் வெற்றியால் அரசியலை மறந்த உலக நாயகன்.. 3 பெரிய நடிகர்களுக்கு விரித்த வலை
அதனால் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் இப்பொழுது கமல்ஹாசனிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறார். தற்போது நடிப்பில் தீவிரம் காட்டி வரும் ஆண்டவரும் இந்த படத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று உறுதி கொடுத்திருக்கிறாராம்.
தற்போது பிக் பாஸ், இந்தியன் 2 என்று பிசியாக இருக்கும் கமல் அந்த வேலைகளுக்கு நடுவில் இந்த பட வேலைகளையும் ஆரம்பிக்க கூறியிருக்கிறார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டவரின் கலக்கலான காமெடி கலாட்டாவை ரசிகர்கள் விரைவில் காணலாம்.
Also read:50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்