சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. உங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என மேடையில் உருகிய அபிராமி

Actress Abhirami: 2000ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி, உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக  விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். இதில் அன்னலட்சுமி ஆக அபிராமி அந்த கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி நடித்து அசத்தினார்.

தற்போது 42 வயதாகும் அபிராமி  சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அதிலும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை குரங்கு பொம்மை  படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்குகிறார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

Also Read: ஓவர் குடியால் பூசணிக்காய் போல் மாறிய 5 நடிகைகள்.. போதைய போட்டா சொர்ணாக்கா லெவல் காட்டும் கிரண்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிக்கும்  நடராஜ், அருள்  தாஸ், படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன், தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அபிராமி  விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை என்பதை வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் தீவிரமான கண்களை கமலிடம் பார்த்தேன். அதன் பிறகு விஜய் சேதுபதியின் கண்கள் தான் என்று சொல்வேன். அந்த கண்களைப் பார்த்தாலே மெய் மறந்து விடுவேன். அதுமட்டுமல்ல உங்களிடம் அபரிவிதமான திறமையும் இருக்கிறது. நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு படத்தையும் ஏதாவது ஒரு  காரணத்தோடு நடிக்கிறீர்கள். அதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கிறது என்று அபிராமி விஜய் சேதுபதியை நேரடியாக புகழ்ந்து பேசினார்.

Also Read: கலெக்டராய் அசத்திய 5 ஹீரோயின்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய மதிவதனி

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் அபிராமி இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படத்தின் கதை உட்பட எதைப்பற்றியும்  அவர் இயக்குனரிடம் கேட்கவில்லையாம். விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஒரே காரணம்தான் இந்த படத்தில் அவர் நடித்ததாகவும் மேடையில் உருகி பேசினார்.

மகாராஜா திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகிறது. இதில் அனுராக் காஷ்யப், மம்தா, மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகயுள்ளது.

Also Read: அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

Trending News