சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கூப்பிட்டு அவமானப்படுத்திய கமல்.. இப்ப வழிய போய் வாய்ப்பு கேட்கும் ஆண்டவர்

Actor Kamal: கமலின் அனுபவம் சினிமாவில் மிகப்பெரியது என்பதை யாராலும் மறக்க முடியாது. பல பரிமாணங்களை கொண்டுள்ள இவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். வெள்ளிதிரையில் மிக பிஸியாக இருந்தாலும் சின்னத்திரையையும் கமல் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் வெள்ளிதிரையில் ஒரு புறம் நடிப்பு மற்றொருபுறம் தயாரிப்பு என படுபயங்கரமாக கமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதுவும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் படங்களுக்கான தேர்வை மிகவும் சரியாக செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது ரசிகர்கள் அதிகம் விரும்பும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து தான் படம் எடுத்து வருகிறார்.

Also Read : வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

இந்த சூழலில் பிரபலம் ஒருவரை கூப்பிட்டு அவமானப்படுத்திய கமல் இப்போது அவரின் வெற்றியை பார்த்து தூது விட்டிருக்கிறார். அதாவது தொடர்ந்து வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குனர் அட்லீ. சமீபத்தில் பாலிவுட்டில் இவரது நடிப்பில் ஜவான் படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இன்னும் சில நாட்களில் ஷாருக்கானின் பதான் படம் வசூலை ஜவான் முறியடிக்கும் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அட்லீயின் படத்தை தயாரிக்க வேண்டும் என்று தான் கமல் தூது விட்டு இருக்கிறாராம். ஆனால் இதற்கு முன்னதாக அட்லீயை கமல் அவமானப்படுத்தி இருக்கிறார்.

Also Read : இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

அதாவது அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான போது கமல் அட்லீயை தனது ஆபீசுக்கு அழைத்து பாராட்டி இருக்கிறார். பொதுவாகவே அட்லீ சில படங்களில் இருந்து காட்சிகளை காப்பி எடுப்பார் என்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அதை நாசுக்காக சொல்லும் படி கமல் என்னுடைய அபூர்வ சகோதரர்கள் படம் போல் மெர்சல் இருந்ததாக கூறினார். இதனால் அட்லீ வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாராம். அதற்கு சரியான பாடம் புகட்டும் படி இப்போது கமலே வழியக்கச் சென்று அட்லீ படத்தின் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read : பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

Trending News