புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மனோரமாவிற்கு பின் 750 படங்களில் நடித்த ஒரே நடிகை.. 60 வயதில் தேசிய விருதுக்காக எடுத்த புது அவதாரம்

ரசிகர்களால் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அவர் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தார். இப்போது வரை அவருடைய இடத்தை பிடிக்க யாராலும் முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இவருக்கு அடுத்தபடியாக 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகையும் இருக்கிறார். தற்போது அறுபது வயதாகும் அவர் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து தன்னை நிரூபித்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தற்போது செம்பி திரைப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்திருக்கும் கோவை சரளாதான். கோயம்புத்தூர் பாஷையில் பேசும் இவருடைய ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

Also read: செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாடி லாங்குவேஜில் நடிக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் செம்பி திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்த ட்ரெய்லர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இதுவரை எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கோவை சரளா இந்த திரைப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கேரக்டரில் கலக்கியிருக்கிறார். மேலும் இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இப்பவே கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் இப்படத்தில் கடின உழைப்பை போட்டிருக்கிறார் என்பதற்கு ட்ரெய்லரே ஒரு உதாரணம்.

Also read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

மேலும் இந்த படம் தான் அவருக்கு மிகவும் ஸ்பெஷல் படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு முன்பே அவருக்கு இப்போது வரை மனதுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு படமும் இருக்கிறது. அதாவது இதுவரை காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த கோவை சரளா உலக நாயகன் கமலுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தில் கமல் மற்றும் கோவை சரளா இருவரும் ஜோடியாக கோயம்புத்தூர் பாஷையில் பேசி கலக்கி இருப்பார்கள். மிகப்பெரிய நடிகர்கள் யாரும் காமெடி நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் கமல் கோவை சரளாவுடன் இணைந்து நடித்தது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்த படத்தின் மூலம் கோவை சரளாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதனாலேயே அவர் இந்த படத்தை ரொம்பவும் ஸ்பெஷல் படமாக கருதுகிறார்.

Also read: மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் கோவை சரளா.. அந்த கேரக்டர் செலக்ட் பண்ணதுதான் மாஸ்

Trending News