சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஷபானா- ஆரியனைப் போல் காதலித்து கரம் பிடித்த சின்னத்திரை ஜோடி.. வைரலாகும் திருமண புகைப்படம்

Serial Actress Wedding Photo: சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் சமீப காலமாகவே காதலித்து ஒருவர் ஒருவரை திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் சிலர் என்னதான் கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிந்து விட்டாலும், ஷபானா- ஆரியனைப் போல் பலர் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஒரு சந்தோசம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று இப்போது சின்னத்திரை காதல் ஜோடி கோலாகலமாக இன்று திருமணம் செய்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான் நடிகை ஜனனி பிரதீப்.

Also Read: தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

இவர் ஆல்பம் பாடல் ஒன்றில் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் இனியன் என்பவரை கடந்து சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் காதலிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று இனியன்- ஜனனி பிரதீப் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியன், சூப்பர் சிங்கர் சாம் விஷால் உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த காதல் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

காதல் ஜோடி இனியன்- ஜனனி பிரதீப்

serial-actress-janani-lover-cinemapettai
serial-actress-janani-lover-cinemapettai

Also Read: பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

மேலும் இனியன் பிரபல யூட்யூபராக இருப்பது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘வித்யா No.1’ என்ற சீரியலில் சஞ்சய் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி சின்னத்திரை ரசிகர்களிடம் பேமஸான ஜோடி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இந்த காதல் ஜோடிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிகிறது.

காதலித்து கரம் பிடித்த சின்னத்திரை ஜோடி இனியன்- ஜனனி பிரதீப்

serial-actress-janani-cinemapettai
serial-actress-janani-cinemapettai

Also Read: குணசேகரனை நம்பி மோசம் போன கதிர்.. புருசனை நினைத்து கண்ணீர் வடிக்கும் நந்தினி

Trending News