வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

மீண்டும் 3 வருடம் கழித்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசை.. மேடையில் ஓப்பனாக பேசிய உதயநிதி

தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்ட உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஜூன் 29 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.  அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது முன்பு மாமன்னன் படம் தான் தன்னுடைய சினிமா கேரியரின் கடைசி படம் என சொன்ன உதயநிதி ஸ்டாலின் மீண்டும் 3 வருடம் கழித்து படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

கூடவே என்னுடைய படத்தை அந்த இயக்குனர் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் செக் வைத்துள்ளார். அதாவது இப்போதைக்கு தன்னுடைய கடைசி படம் மாமன்னன் தான் எனக் கூறிய உதயநிதி, அமைச்சர் பதவி கிடைத்த பிறகு பணிகள் அதிகம் இருப்பதால் அடுத்த 3 வருடத்திற்கு நான் படம் நடிக்க வாய்ப்பு இல்லை. அப்படியே நடித்தாலும் அது மாரி செல்வராஜ் படத்தில் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக சொல்லி இருக்கிறார்.

Also Read: உதயநிதி கூப்பிட்டு வர மறுத்த ரஜினி.. கூட்டணி போட ஒப்புக்கொண்ட கமல்

மேலும் மாமன்னன் படத்தை முடித்த பிறகு அடுத்து கமல் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை இன்னும் 3 வருடம் கழித்து கமல் தயாரிப்பில் நடித்தாலும் அந்த படத்திற்கு மாரி செல்வராஜ் தான் இயக்குனராக இருக்க வேண்டும் என்பதை உலக நாயகனிடம் உதயநிதி நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

இதற்கு காரணம் என்னவென்றால், இப்போது அரசியலில் இருக்கும் உதயநிதி இதே பாணியில் அடுத்த படத்தையும் எடுத்து தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கும் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்வார். அதற்கு முன்னோட்டம் ஆகத்தான் இந்த மாமன்னன் படத்தில் அரசியலைப் பற்றி நிறையவே பேசி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு வயதான கெட்டப்பில் காமெடியை தவிர்த்து சீரியஸான கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் உடன் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

Also Read: அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் வடிவேலு.. பிரம்மாண்டமாக மேடை போட்டு கொடுக்கும் உதயநிதி

மேலும் மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகநாயகன் கமலஹாசனும் மாமன்னன் படத்தைக் குறித்து பேசி இருக்கிறார். உதயநிதி என்னுடைய படத்தில் நடிக்கவில்லை என்பது கவலை தான். ஆனால் அவர் மாமன்னன் படத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சி. இந்த படம் அரசியலைப் பற்றி பேசும் நல்ல படம். நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன். இது மாரி செல்வராஜ் வகை அரசியல் மட்டுமல்ல, இது உதயநிதி ஸ்டாலின் வகையான அரசியலையும் பேசக்கூடிய படம் என்று கூறினார்.

இவ்வாறு 3 வருடம் கழித்து உதயநிதி கமல் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு இயக்குனராக மாரி செல்வராஜ் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அரசியலுக்குள் புகுந்த பிறகும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிப்பதை விடுவதற்கு சுத்தமாகவே மனசில்லை. அதனால் தான் மீண்டும் 3 வருடம் கழித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை என மாமன்னன் பட இசை வெளியீட்டு விழா மேடையில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

Also Read: உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் முழிக்கும் ரெட் ஜெயண்ட்

Trending News