வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

Actor Sivakarthikeyan again the debtor: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம், 5 வருட காத்திருப்பதற்குப் பிறகு ஒரு வழியாக இந்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் இதுவரை தமிழ் சினிமா நெருங்காத ஏலியன் கான்செப்டில் வெளியானதால் ரசிகர்களின் மத்தியில் அயலான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிவகார்த்திகேயன் நிறைய பஞ்சாயத்துகளை சரி கட்டினார். ஏற்கனவே தனக்கு இருந்த கடன்களில் 35 கோடியில் வெறும் 27 கோடியை தான் படாத பாடுபட்டு அடைத்திருக்கிறார். இன்னும் மீதம் 8 கோடி கடனை திருப்பித் தர முடியாமல் திணறுகிறார்

இந்த சமயத்தில் அயலான் படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் வேண்டுமானால் அயலானுக்கு ஆதரவு கிடைத்திருக்கலாம், ஆனால் அக்கட தேசங்களில் இதற்கு சுத்தமாகவே ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதிலும் கேரளா மற்றும் வெளிநாடுகளில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: ஆபத்துப்பாண்டவனாய் சிவகார்த்திகேயனுக்கு உதவிய சாமி.. 5 வருடமா போராடிய அயலான் ரிலீசுக்கு உதவிய கர்ணன்

சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரச்சனை

தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் எதிர்பார்த்த கலெக்சன் வரவில்லை, அதிலும் குறிப்பாக வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்கள் சரிவர திரையரங்கை கொடுக்கவில்லை. இதனால் வசூலிலும் மண்ணை கவ்வியது. அயலான் படத்தை வைத்து தான் சிவகார்த்திகேயன் மீதம் இருக்கிற கடனை எல்லாம் ஒழித்துவிடலாம் என்று நம்பி இருந்தார். ஆனால் இப்போது அதற்கு வழி இல்லாமல் போனதால், படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை மட்டுமே கேட்க முடியும்.

ஏற்கனவே இமான் கிளப்பிவிட்ட பிரச்சனையால், சோசியல் மீடியாவில் மென்று தின்னப்பட்டார், இப்ப அயலான் படத்திற்கு பிறகு மறுபடியும் சிவகார்த்திகேயன் தான் கடனாளியான மாறினார். ‘பேசாம ஏலியன் கூடவே போயிட வேண்டியதான்’ என்பதுதான் இப்போது சிவகார்த்திகேயனின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. 

Also Read: தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. செக் வைத்த உதயநிதி

Trending News