சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனுஷை வெறுப்பேத்த மாஸ்டர் பிளானில் ஐஸ்வர்யா.. பழிக்குப்பழி ரத்தத்திற்கு ரத்தம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் காதலித்து மணந்து கொண்ட நடிகர் தனுஷை விட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் அறிவித்த அவர்களின் விவாகரத்து செய்தி தான் தற்போது தமிழகத்தின் முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அவர்கள் திடீரென முடித்துக் கொள்வதாக அறிவித்தது ரஜினி உட்பட ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் அனைவரையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க அனைவரும் எடுத்த முடிவுகள் தற்போது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

ஐஸ்வர்யா மனமிரங்கி சேர்ந்து வாழ சம்மதித்தாலும் தனுஷ் தன்னுடைய முடிவை உடனே மாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இது ஐஸ்வர்யாவை மிகுந்த ஆத்திரம் அடைய செய்திருக்கிறது. அப்பாவுக்காக சற்று இறங்கி வந்த அவர் தனுஷின் இந்த பேச்சால் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்.

இதனால் அவர் தனுசை வெறுப்பேற்ற ஒரு அதிரடியான வேலையை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதாவது அவர் ஏற்கனவே மூன்று, வை ராஜா வை ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். தற்போது ஒரு ஆல்பம் பாடலையும் அவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவங்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக நடிகர் சிம்புவை நடிக்க வைக்க அவர் முடிவு எடுத்துள்ளார். ஏனென்றால் தனுஷ், சிம்பு இருவருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா அவருடைய திருமணத்திற்கு முன்பே சிம்புவை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்த நிலையில் அவர் சிம்புவை வெறுப்பேற்ற தனுஷை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செய்தி அப்போதே பத்திரிகைகளில் பரபரப்பாக இருந்தது.

தற்போது அதே பாணியைத்தான் ஐஸ்வர்யா மீண்டும் செய்ய இருக்கிறார். தன் கணவர் தனுஷை வெறுப்பேற்ற பக்காவாக பிளான் போட்டிருக்கும் ஐஸ்வர்யா அதற்கு சிம்புவை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News