திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குந்தவை மார்க்கெட்டை சரிக்க பக்கா பிளான் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. விட்ட இடத்தை பிடிக்க போராடும் த்ரிஷா

தமிழ் திரையுலகில் புதிய கதாநாயகிகளுக்காண தேடல் முன்பைவிட தற்போது அதிகமாக உள்ளது. இந்நிலையில் தனக்கான திரைப் பயணத்தை நீண்டதொரு ஒரு பயணமாக மட்டுமல்லாமல், இன்றும் தனக்கான வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா!

39 வயதாகும் திரிஷா இறுதியாக நடித்த பொன்னியின் செல்வன் வரை தனக்கான கதாப்பாத்திர தேர்வை மிகக்கவனமாக தேர்ந்தெடுப்பவர். இடையிடையே சற்று சறுக்கினாலும் இவர் நடித்த சமீபத்திய படங்களான “96”, “பேட்ட”, “பொன்னியின் செல்வன்-பகுதி ஒன்று”, போன்ற படங்கள் இவருக்கு மிகச் சிறந்த பெயரை வாங்கிக் கொடுத்தன.

Also Read: தாராளமாக கிளாமர் காட்ட களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. கேட்டவுடன் கிக் ஏத்தும் படத்தின் டைட்டில்

இவரைப்போலவே, தனக்கான கதாபாத்திரத் தேர்வில் மிகவும் கவனமாக, சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வல்லவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து நடன போட்டிகளில் பங்குபெற்று இன்று தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்திய 2022- ற்கான “சைமா” விருது விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், திரிஷாவின் முன்னிலையில் தன்னுடைய இந்த இடத்திற்கும் வெற்றிக்கும் ஊக்க சக்தியாக இருப்பவர் திரிஷா அவர்களே என்றார். அந்த அளவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷின் மானசீக குருவாக திரிஷா இருக்கிறார்.

Also Read: அண்ணனுக்காக கெஞ்சி மூக்குடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த சிபாரிசு எல்லாம் எங்க கிட்ட செல்லாது அம்மணி

இச்சூழலில் வருகிற டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இருவரது படங்களும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. ‘லைகா’ தயாரிப்பில், எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிக்கும் படம் “ராங்கி”. இந்த படம் வருகிற 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும் வெளியாகிறது. ஆர் கண்ணன் இயக்கும் படம் மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில் ஓடிடி தளத்தில்வெளியானது. எப்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ளது.

கிட்டத்தட்ட ஒரே நாளில் வெளியாகும் இந்த இரு படங்களும் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்குள் போட்டியை கிளப்புமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட் இப்பதான் மேலே எகிறி கொண்டு வருகிறது இந்த சூழ்நிலையில் ராங்கி படம் கைகொடுக்குமா என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read: நயன்தாராவுக்கு போட்டி த்ரிஷா, சமந்தா இல்லயாம்.. 15 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை, அடேங்கப்பா!

Trending News