Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

18 வருடங்களுக்கு பிறகு அஜித்தை சந்தித்த எஸ்ஜே சூர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

18 வருடங்களுக்கு பிறகு அஜித்தை சந்தித்த எஸ்ஜே சூர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Ajith-SJ Suryah: அஜித், எஸ் ஜே சூர்யா இந்த பெயரை தலைப்பில் பார்த்ததும் எவர்கிரீன் ஹிட் படமான வாலி தான் நம் கண் முன் வந்து போகும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் இது. அஜித், சிம்ரன் […]

Ajith-SJ Suryah: அஜித், எஸ் ஜே சூர்யா இந்த பெயரை தலைப்பில் பார்த்ததும் எவர்கிரீன் ஹிட் படமான வாலி தான் நம் கண் முன் வந்து போகும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் இது. அஜித், சிம்ரன் கெமிஸ்ட்ரியில் 90ஸ் கிட்ஸ்கள் இன்றுவரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் தான் வாலி.

ஏப்ரல் மாதத்தில், நிலவைக் கொண்டு வா, ஓ சோனா போன்ற பாடல்கள் இன்று வரை நம் ப்ளே லிஸ்ட்டை ஆட்சி செய்து வருகின்றன. வாலி படத்திற்கு பிறகு அஜித் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து பணி புரியவில்லை.

எஸ் ஜே சூர்யா குஷி படத்திற்கு பிறகு ஒரு பெரிய பிரேக் எடுத்தபோது அஜித் அழைத்து கால்ஷீட் கொடுத்த போதும் சூர்யா அஜித்துக்கு படம் பண்ண வில்லை. இருந்தாலும் இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

அஜித்தை சந்தித்த எஸ்ஜே சூர்யா

கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து அஜித் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 90களின் இறுதியில் அஜித் சந்தித்த எஸ் ஜே சூர்யா வேற, இப்போது சந்தித்திருக்கும் எஸ் ஜே சூர்யா வேற.

இயக்குனரிலிருந்து நடிப்பு அரக்கனாக மறு அவதாரம் எடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் அஜித்குமார் அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. தற்போது அஜித்தை வைத்து படம் இயக்கப் போகும் ஆதிக் ரவிச்சந்திரன் இடம், குட் பேட் அக்லி படத்தில் தனக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா தான் நடிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறாராம்.

தற்போது இதற்கான பேச்சு வார்த்தை தான் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

18 வருடங்களுக்கு முன் அஜித் எஸ் ஜே சூர்யா வாலி படப்பிடிப்பில்

Ajith SJ Suryah at Vaalee movie shoot
Ajith SJ Suryah at Vaalee movie shoot

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.