Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித்தை பார்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்ட பயில்வான்.. கொஞ்சமும் எதிர்பாராத பதில்

அஜித்தை பார்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்ட பயில்வான்.. கொஞ்சமும் எதிர்பாராத பதில்

பயில்வான் ரங்கநாதன் தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் நான் சொல்வது உண்மைதான் […]

பயில்வான் ரங்கநாதன் தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் நான் சொல்வது உண்மைதான் அதனால்தான் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

பயில்வான் எம்ஜிஆர் காலத்திலிருந்து படங்களில் நடித்து வருவதால் அப்போதைய காலகட்டத்தில் உள்ள நடிகைகள் முதல் தற்போது உள்ள நடிகைகள் வரை இவர் அவர்களைப் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். இதனால் இவர் யூடியூப் சேனலுக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் அஜித் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் பயில்வான் வில்லங்கமான கேள்விகளை கேட்டுள்ளார். அதாவது, நீங்கள் ஏன் முன்பு மாறி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இல்லை என பயில்வான் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அஜித் என்னை பற்றி உங்களுக்கே தெரியும், உங்களுடன் நிறைய படங்கள் நான் நடித்துள்ளேன்.

நான் தனிமையை விரும்புபவன். ஒரு படத்திற்கு கண்டிப்பாக பப்ளிசிட்டி தேவை. ஆனால் அதைத் தாண்டியும் அவருக்கு ஒரு வாழ்க்கை உண்டு. நான் நிறைய பிளாப் படங்கள் கொடுத்துள்ளேன். என்ன போல வேற யாரும் இருந்தா இந்நேரம் சினிமாலேயே இருந்திருக்க முடியாது.

ஆனால் நான் இப்பவும் நடிக்கிறதுக்கு காரணம் ரசிகர்கள் மட்டும் தான். மேலும், நான் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் வயது உள்ள போதே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அஜித் பயல்வானுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது பல சினிமா பிரபலங்களும் பயில்வான் பேச்சை தடுக்க முடியாத நிலையில் அப்போதே அஜித் தனது பதிலால் பயில்வான் வாயை மூட செய்துள்ளார் என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.