சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய்யை தொடர்ந்து கேரளா கிளம்பிய அஜித்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நீண்ட காலமாக அஜித் ரசிகர்கள் அவரை அமர்க்களம், ஆசை போன்ற படங்களில் பார்த்த கெட்டப்களில் பார்க்க வேண்டும் என்ற கனவில் மிதந்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது அஜித் உடல் எடை சற்று அதிகரித்து காணப்படுகிறார். மேலும் திரைப்படங்களில் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் அதற்கு ஏற்றார் போல் இருக்கிறது.

இதனால் ப்ளூ சட்டை மாறன் போன்றவர்கள் எல்லாம் அவரை உருவ கேலி செய்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் அஜித் கொஞ்சம் அதிகமாக வெயிட் போட்டு விட்டார். இதனால் தான் அவரை சிலர் தொடர்ந்து கேலி பேசி வருகின்றனர்.

இதனால் அஜீத் தற்போது தன் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாற முடிவு செய்துள்ளார். மேலும் அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் மிகவும் இளமையாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்போது கேரள ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்ல இருக்கிறார்.

சமீபத்தில் உடல் எடை அதிகமாக இருந்த நடிகர் சிம்பு கூட கேரளா சென்று பல ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக் கொண்டு தன் உடல் எடையை குறைத்து திரும்பி வந்தார். பிறகு அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் பல திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்த வருகிறது.

இதுதவிர நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்காக கேரளா சென்று ஆயுர்வேத மசாஜ் செய்து கொண்டு வந்தார். இடைப்பட்ட காலத்தில் சிறிது வெயிட் போட்டிருந்த விஜய் சமீபகாலமாக தன் உடல் எடையை குறைத்து அதை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து அஜித் தற்போது தன் உடல் எடையை குறைத்து இளமையாக மாறும் முனைப்பில் இருக்கிறார். தற்போது வலிமை கூட்டணியுடன் அடுத்த படத்தை தொடங்க இருக்கும் அஜித் அதையடுத்து விக்னேஷ் சிவன், சிறுத்தை சிவா என்று அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதனால்தான் அவர் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப திட்டமிட்டுள்ளார். அதனால் கூடிய விரைவில் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது. அவர்கள் எதிர்பார்த்தபடியே மீண்டும் அஜித் காதல் மன்னன் போன்று திரும்ப வர இருக்கிறார்.

Trending News