வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

26 வருடங்களில் அஜித்தை தூக்கி விட்ட யுவனின் ஏழு படங்கள்.. அனிருத்துக்கு இப்பவும் டஃப் கொடுக்கும் மங்காத்தா

அஜித்தின் 26 வருட சினிமா வாழ்க்கையில் ஏழு படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். அஜித்தை ஸ்டைலைஸ் ஆகவும், வெறித்தனமாகவும், டியூன் மூலம் கைகோர்த்து இருக்கிறார். அதிலும் இவரின் மங்காத்தா படத்தில் வரும் பிஜிஎம் இப்பொழுது இருக்கும் அனிருத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தீனா: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சுரேஷ் கோபி, லைலா போன்ற நடிகர்கள் நடித்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தான் யுவன் சங்கர் ராஜா பெரிய வெற்றியை பார்த்திருக்கிறார். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே செம ஹிட் பாடல்கள் ஆனது. அதிலும் “வத்திக்குச்சி பத்திக்காதடா” என்ற பாடல் அஜித்திற்கு ஏற்ற மாதிரியாக டியூன் அமைத்துக் கொடுத்திருப்பார்.

Also read: தீனா பட அஜித்தின் மச்சினிச்சி ஞாபகம் இருக்கிறதா.? கணவனுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்!

பில்லா: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் பிஜிஎம் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டானது. இதில் அஜித்திற்கு யுவன் போட்ட பிஜிஎம் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய ஹைலைட் ஆக அமைந்தது.

ஏகன்: ராஜசுந்தரம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ஏகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், நயன்தாரா, சுமன், ஜெயராம், நாசர் போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் “கிச்சு கிச்சு”என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பின்னணி பாடி இருப்பார்.

Also read: அஜித்தை விட விஜய் மோசமான வில்லன்.. உண்மையை உளறிக் கொட்டிய ஆதி குணசேகரன்

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, பிரேம்ஜி போன்ற நடிகர்கள் நடித்தார்கள். இப்படம் அஜித்திற்கு 50-வது படமாக அமைந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரும் “விளையாடு மங்காத்தா” என்ற பாடல் திரையரங்களில் ஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆரம்பம்: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள “அடடா ஆரம்பமே” இந்தப் பாடலில் வரும் டியூன் மூலமாக அஜித் எனர்ஜியுடன் ஆடி இருப்பார். இந்த படத்திற்கு யுவனின் பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.

Also read: மங்காத்தா பட நடிகரின் பீட்சா-3 டீசர்.. இணையத்தை மிரட்டும் பேய்

நேர்கொண்ட பார்வை: எச் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித்,ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இயக்குனர் எச்.வினோத்துடன் இணைந்து தனது முதல் கூட்டணியில் யுவன் இசையமைத்திருக்கிறார்.

வலிமை: எச்.வினோத் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வலிமை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், கார்த்திகேயா,ஹுமா குரேஷி, போன்ற நடிகர்கள் நடித்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதுவரை அஜித்திற்கு ஸ்டைலிஷ் ஆக டியூன் போட்டு கொடுத்துட்டு இருந்த யுவன், இந்தப் படத்தில் அம்மா சென்டிமென்ட் வைத்து பாடலை ரசிக்கும்படி கொடுத்திருப்பார்.

Also read: வலிமை கிளைமேக்ஸை ஹைதராபாத் என்கவுண்டருடன் சம்பந்தப்படுத்திய ஹெச். வினோத்.. அதிர வைக்கும் பேட்டி

Trending News