Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கடவுள் போல் துணை நிற்கும் அஜித்.. இது தெரிஞ்சா கோயிலே கட்டிடுவாங்களே!

கடவுள் போல் துணை நிற்கும் அஜித்.. இது தெரிஞ்சா கோயிலே கட்டிடுவாங்களே!

பொதுவாகவே நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களில் வேலை செய்யும் துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுபவர். இப்போது கொஞ்சம் அமைதியாக மாறிவிட்ட அஜித் ஆரம்ப காலகட்டத்தில் அனைவருடனும் மிகவும் கலகலப்பாக பழகுவாராம். அந்த […]

பொதுவாகவே நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களில் வேலை செய்யும் துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுபவர். இப்போது கொஞ்சம் அமைதியாக மாறிவிட்ட அஜித் ஆரம்ப காலகட்டத்தில் அனைவருடனும் மிகவும் கலகலப்பாக பழகுவாராம்.

அந்த வகையில் அவர் இருக்கும் இடமே ரொம்பவும் ஜாலியாக இருக்கும் என்று பலரும் கூறி இருக்கின்றனர். தற்போது குடும்பம், நடிப்பு என்று பிஸியாக இருக்கும் அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படத்தில் வேலை செய்பவர்களுக்கு பிரியாணி சமைத்துக் கொடுப்பது போன்ற செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் ஒரு மாபெரும் காரியத்தை செய்து வருகிறார். அதாவது அஜித் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படம் ரிலீசாகிறது என்றால் தன்னுடைய மேனேஜரை கூப்பிட்டு படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள விஷயத்தை பற்றி கேட்பாராம்.

அனைவருக்கும் சரியாக சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதா அல்லது வேறு யாருக்காவது சம்பள பாக்கி இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பாராம். அப்படி யாருக்காவது சம்பளப் பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது என்று தெரிந்தால் அந்த டெக்னீஷியன்களை அழைத்து எவ்வளவு சம்பள பாக்கி இருக்கிறது என்று விசாரித்துக் கொள்வாராம்.

அதன் பிறகு அவர் தயாரிப்பாளருக்கு போன் போட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து உடனே செட்டில் செய்துவிடுங்கள் என்று ஒரே போடாக போட்டு விடுவாராம். அஜித்தே போன் செய்து இப்படிக் கூறும்போது தயாரிப்பாளர்களால் மறுக்கவா முடியும்.

உடனே அவர்களும் யாருக்கு சம்பள பாக்கி இருக்கிறதோ அவர்களுக்கு உடனே செட்டில் செய்து விடுகிறார்களாம். இந்த செயலை அவர் பல வருடங்களாக பின்பற்றி வருகிறார். இதனால் துணை நடிகர்கள் உட்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளப் பணம் கரெக்டாக வந்து சேர்ந்துவிடுகிறதாம்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த டெக்னீஷியன்கள் அஜித்தை இவர் மனுஷனே கிடையாது தெய்வம் என்று புகழ்ந்து வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால் அவர்கள் அஜித்துக்காக கோவிலே கட்டி விடுவார்கள் போல. என்ன இருந்தாலும் சக தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு யாருக்கும் வராது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.