புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உன் சவகாசமே வேண்டாம், ஒதுங்கிய அஜித்.. பெரிய இடத்தை பகைச்சாலும் ஏகே தனிக்காட்டு ராஜா தான்

Ajith: யாரு எப்படி போனாலும், எவ்ளோ பெரிய இடத்துக்கு வந்தாலும் எனக்கு என்ன என்று கெத்தாக தன் வேலையை மட்டுமே பார்த்து நடித்து வரக்கூடிய ஒரு நடிகர் யார் என்றால் அது கண்டிப்பாக அஜித் ஆக மட்டும் தான் இருக்க முடியும். எல்லோரும் வேலை பார்க்கிற மாதிரி நடிப்பு என்னுடைய வேலை, அதை நான் நடித்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறேன் அவ்வளவுதான்.

என் படம் பிடித்திருந்தால் பாருங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று இவருக்கென்று ஒரு கோட்பாடு வைத்து அதன் படியே நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் இன்னும் சில கட்டுப்பாடுகளை அவருக்கு அவரே போட்டுக் கொண்டு இருக்கிறார். அதாவது படங்களில் அரசியல் ரீதியாகவும், வசனங்களும் இருக்கக் கூடாது.

Also read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி

அதே நேரத்தில் என்னுடைய படங்கள் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விலை போகக்கூடாது என்றெல்லாம் சில ரூல்ஸ் வைத்திருந்தார். ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தில் முதல் முறையாக லைக்கா நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார். அதுவுமே அஜித் போட்ட கண்டிஷனுக்கு அவர் அனைத்திற்கும் ஒத்துக் கொண்டதனால் மட்டுமே.

அதாவது நீங்கள் தயாரித்தலும் நான் இந்த படத்தை நடித்து முடித்த பிறகு என் வழியில் நீங்கள் குறுக்கிட கூடாது. ப்ரமோஷனுக்கு வாங்க, ஆடியோ லான்ச் பண்ணுங்க, இன்டர்வியூ கொடுங்கள் என்று எந்தவித எதிர்பார்ப்பும் வைத்து என்னிடம் வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டு தான் அஜித் லைக்காவுடன் இணைந்திருக்கிறார்.

Also read: 3 நாள் சூட்டிங் போன பிறகும் முடியாதுன்னு ஒதுங்கிய அஜித்.. பணம் தான் முக்கியம்னு ஏ கேவை ஒதுக்கிய இயக்குனர்

லைக்காவும் இவர் நடித்தால் மட்டுமே போதும் என்று அஜித் சொன்ன அனைத்திற்கும் ஓகே சொல்லி இருக்கிறது. இதனை தொடர்ந்து சன் பிக்சரும் எப்படியாவது அஜித்தை வைத்து ஒரு படத்தை பண்ணி விட வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் இன்று வரை உங்களுடைய சகவாசமே வேண்டாம் என்று கலாநிதி மாறினிடமிருந்து ஒதுங்கியே வருகிறார்.

எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அஜித் இந்த விஷயத்தில் அவருடைய கொள்கையே மாற்றிக் கொள்ளாமல் தனிக்காட்டு ராஜாவாக அவர் இஷ்டம் போல் படங்களில் நடித்து ஜெயித்துக் கொண்டுதான் வருகிறார். இதில் பெரிய இடமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அவர்களை பகைச்சு தான் வருகிறார். அதற்கு காரணம் இவரிடம் படம் பண்ணினால் ப்ரமோஷன் பேட்டி என்று பல விஷயங்களுக்காக கூப்பிட்டு விடுவார் என்பதற்காகத் தான் அஜித் அவருடைய முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்.

Also read: மறைமுகமாக அஜித், விஜய் செய்யும் தவறு.. மொத்த பித்தலாட்டமும் கல்லாவை நிரப்ப தான்

Trending News