புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காமெடி நடிகரை பார்த்து மிரண்டு போன அஜித்.. இந்த மனுஷன் சாதாரண ஆளே கிடையாது

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டியது. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் இதே கூட்டணியில் ஏகே 61 படம் உருவாக உள்ளது.

இந்நிலையில் அஜித்துடன் சூரி சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வந்த புதிதில் சூரிக்கு எந்த பட வாய்ப்பும் சரியாக கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. வெண்ணிலா கபடிகுழு படத்தில் சூரி நடித்த பரோட்டா காமெடி பிரபலமடைய அதன்மூலம் பரோட்டா சூரி என்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். சூரி, சிவகார்த்திகேயனுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வெற்றிமாறனின் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கொடுத்து வரும் நிலையில் விடுதலைப் படம் சூரிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீமராஜா படத்தில் சூரி ஒரு சின்ன காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் சூரிக்கு, இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது சிவா உங்களிடம் அஜித் சார் பேசணும்னு சொல்லி இருக்காரு என கூறியுள்ளார். அதன்பிறகு சூரியிடம் பேசிய அஜித், உங்களுடைய சிக்ஸ்பேக் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

கிராமத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்து சினிமாவுக்காக மெனக்கெட்டு ஒரே ஒரு சீனுக்காக நீங்கள் இவ்வளவு தூரம் சிரமம் எடுத்து சிக்ஸ் பேக் வைத்திருக்கிறீர்கள் என சூரியை புகழ்ந்து அஜித் பேசியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending News