ஒரு வழியா விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறந்தாச்சு.. ஹீரோயினை ஓகே செய்து அஜித் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆன கட்டளை

Actor Ajith: அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கான அப்டேட்டுகள் எதுவுமே வெளியில் வராமல் இவருடைய ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. அந்த வகையில் இவருடைய பிறந்தநாள் அன்று விடாமுயற்சி என்ற டைட்டிலை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஆனால் அதன் பிறகு அப்படியே கிணத்தில் போட்ட கல்லாக எந்த ஒரு விஷயமும் ஆரம்பிக்காமல் இருந்தது.

எப்பொழுது தான் இப்படம் ஆரம்பிக்கப்படும் என்று ஏக்கமாக இருந்த ரசிகர்கள், ஒரு நேரத்தில் போங்கப்பா நீங்களும் உங்க படமும் சொல்லிட்டு அவங்க அவங்க வேலையை பாக்க போயிட்டாங்க. அந்த அளவிற்கு ஜவ்வு மாதிரி விடாமுயற்சி படம் ஆரம்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ரெடியாகிவிட்டது.

Also read: மத்தவனா இருந்தா பக்கவாதம் வந்திருக்கும்.. உயிரைப் பனையம் வைத்து அஜித் செய்யும் காரியம்

இதனால் மகிழ்திருமேனி மிகுந்த உற்சாகத்தில் அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி அஜித்தும் ஃபுல் ஃபார்ம்க்கு வந்து விட்டார்.  இவருடைய கால் சீட்டை கொடுத்து விட்டார். இனிமல் என்ன படபடவென்று படப்பிடிப்பு வேலைகள் அமோகமாக நடைபெறும்.

அந்த வகையில் இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு செய்து விட்டார்கள். இதில் த்ரிஷா நடிப்பதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பித்த நிலையில் அவர் லியோ படத்தில் பிசியாக இருந்ததால் இவரால் சரியான பதிலை சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது லியோ படப்பிடிப்பு முடிந்ததால் த்ரிஷா விடாமுயற்சி படத்திற்கான கால் சீட்டை கொடுத்து கமிட் ஆகிவிட்டார்.

Also read: மனைவி சொல்லே மந்திரம் என நடித்து வரும் ஜென்டில்மேன்.. யாரு சாமி நீ? த்ரிஷாவாக இருந்தாலும் முத்தக்காட்சி இல்லையாம்

இதனை தொடர்ந்து அஜித், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன கட்டளையை போட்டிருக்கிறார். அதாவது விடாமுயற்சி படத்தை ஒரே செடியுலில் முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து 14 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்திற்கான முதல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இந்த செய்திகள் உறுதியான நிலையில் அனைவரும் ஒரு வழியாக விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று அவர்களுடைய சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்கள். எது எப்படியோ கூடிய விரைவில் விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அமைந்து வெற்றி பெற்றால், இவ்வளவு நாள் காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்த மாதிரி இருக்கும்.

Also read: லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்