வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்

நம்ம ஊரு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களுக்கும் பெரிய கனவாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய திரைப்படங்கள் உலக அளவில் கெத்து காட்டும். அது மட்டுமல்லாமல் அவர் சமூக சிந்தனை, வியக்க வைக்கும் பிரம்மாண்டம் என ரசிகர்களை கவர்ந்திழுக்க தேவையான ஒவ்வொன்றையும் அவர் பார்த்து பார்த்து செதுக்குவார்.

அதனாலேயே இவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இவருடைய நான்கு படங்களை அஜித் ரிஜெக்ட் செய்துள்ளார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: கமலால் ஒரே படத்தால் காணாமல் போன தயாரிப்பாளர்.. மீண்டும் கை பிடித்து தூக்கி விடும் சூப்பர் ஸ்டார் மோகன்லால்

தற்போது துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் தன் படத்தின் இயக்குனர் மற்றும் கதையில் ரொம்பவும் கவனமாக இருக்கிறார். இப்படி இருக்கும் அவர் சங்கர் படங்களை நிராகரித்ததற்கு பின்னால் சில காரணங்களும் இருக்கிறது.

அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது அவர் சில திரைப்படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் இந்த வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். அதை தொடர்ந்து முதல்வன் திரைப்படத்திற்காகவும் ஷங்கர் அவரை அணுகி இருக்கிறார். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதன் பிறகு தான் அர்ஜுன் அந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார்.

Also read: ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. 21 வருட தவத்திற்கு கிடைத்த பலன்

அதைத்தொடர்ந்து சிவாஜி, எந்திரன் போன்ற திரைப்பட வாய்ப்புகளும் அஜித்திற்கு தான் முதலில் சென்றிருக்கிறது. ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருந்த ஒரு காரணத்தினாலேயே அவர் அதை ரிஜெக்ட் செய்திருக்கிறார். ஏனென்றால் இவ்வளவு கோடி காசு போட்டு படத்தை எடுத்து விட்டு அது வெற்றி பெறவில்லை என்றால் தயாரிப்பாளர் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாவார்.

அந்த ஒரு காரணத்தை சொல்லியே அஜித் அந்த படங்களில் நடிக்க யோசித்து இருக்கிறார். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அதன் பிறகு ஷங்கர் அஜித்தை வேறு எந்த படத்திற்காகவும் அணுகவில்லை. இருந்தாலும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஷங்கரின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. விரைவில் இந்த கூட்டணி இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: அஜித்தை வைத்து தயாரித்து மண்ணை கவ்விய அமிதாப் பச்சன்.. ஆனா மொத்த பாடல்களும் ஹிட்டுன்னு சொன்னா நம்பவா போறீங்க

Trending News