சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிட்டு பிட்டாக காப்பி அடித்த மகிழ் திருமேனி.. டபுள் ஓகே சொன்ன அஜித், இந்த ஹாலிவுட் படம்தான் விடாமுயற்சியா.?

Ajith In Vidamuyarchi: அஜித்தின் துணிவு படத்துக்கு பின், அடுத்த படமான விடாமுயற்சி படத்தை எப்பொழுது திரையில் பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இணைந்த அஜித் முதற்கட்ட படப்பிடிப்பை அஜர்பைஜானில் முடித்துவிட்டார்.

இந்நிலையில் மொத்த பட குழுவும் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம் என்று சென்னைக்கு திரும்பிய நிலையில் மறுபடியும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்கள். இதில் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் கதை எந்த மாதிரியானது என்று ஒரு சில விஷயங்கள் லீக் ஆகி இருக்கிறது.

அதாவது அஜித் திரிஷா கணவன் மனைவியாக இதில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ட்ரிப் போகும் போது த்ரிஷாவை கிட்னாப் செய்து விடுகிறார்கள். இதனால் மனைவியைத் தேடி கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதையாக இருக்கிறது. இந்த மாதிரியான ஸ்டோரி பல படங்களில் ஏற்கனவே நாம் பார்த்திருப்போம். அதிலிருந்து பிட்டு பிட்டாக எடுத்து தான் மகிழ்த்திருமேனி விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார்.

Also read: அஜித்தின் ட்ரெண்ட்டை மாற்றப் போகும் பிரபுவின் மருமகன்.. கேட்கவே காமெடியாக இருக்கு

அதுமட்டுமில்லாமல் இப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் என்கிற இங்கிலீஷ் படத்தின் கதைதான். இந்த கதை அஜித்துக்கு பிடித்துப் போனதால் டபுள் ஓகே கொடுத்து மகிழ் திருமேனிடம் கமிட் ஆகியிருக்கிறார்.  ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி விடாமுயற்சி படம் எப்படி இருக்கப் போகிறது என்பது தான் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும்.

அத்துடன் அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணைந்த த்ரிஷா தற்போது செகண்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இப்படமும் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் அர்ஜுன் இணைந்து இருப்பதால் இவர்களுடைய காம்போவை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிய அளவில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்தை பார்ப்பதற்கு ரொம்பவே ஹேண்ட்ஸம் லுக் உடன் உடம்பை குறைத்துக் கொண்டு கதைக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து வருகிறது.

Also read: பாலாவிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய அஜித்.. 2 முறை திட்டம் போட்டு பல்பு வாங்கிய சைக்கோ

Trending News