Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

AK61 – மீண்டும் சொதப்பிய வினோத்.. கடுப்பாகி கிளம்பிய அஜித்

AK61 – மீண்டும் சொதப்பிய வினோத்.. கடுப்பாகி கிளம்பிய அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்து போனி கபூர், வினோத், கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் AK61. வெங்கட்பிரபுவின் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்து போனி கபூர், வினோத், கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் AK61. வெங்கட்பிரபுவின் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏனென்றால் வலிமை படம் பல ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்ட இப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது.

இதனால் வலிமை படத்தில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு AK61 படம் வேற லெவல் உருவாக வேண்டும் என அஜித் படக்குழுவிடம் கூறியுள்ளாராம். இதனால் படத்தில் எடுக்கப்பட்ட ஆரம்ப காட்சிகள் எல்லாமே அஜித்துக்கு மனத்திருப்தி ஆக அமைந்துள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறு ஏதாவது ஹாலிவுட் படத்திலிருந்து எடுக்கப்பட்டதா என்பதை தனக்கு தெரிந்தவரிடம் வேவு பார்க்கச் சொல்லியிருக்கிறார் அஜித். அவர்களும் எல்லா ஹாலிவுட் படத்தையும் ஆராய்ந்து அஜித்துக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

இதனால் தற்போது அஜித் கோபத்தில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, ஒன்னும் அவசரம் இல்லை பொறுமையாக படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம், நேரம் எடுத்து நல்லா யோசித்து இந்த தடவை கண்டிப்பா ஹிட் படம் கொடுக்க வேண்டும், அது போன்று படத்தை தயார் பண்ணுங்கள் என்று கூறியுள்ளாராம்.

இதனால்தான் அஜித் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் வினோத் கதையில் மாற்றம் செய்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.