புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சிம்பு பிறந்த நாளுக்கு அஜித், விஜய் அப்டேட்.. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெஷல் டே ஆக அமையும்.!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நடிகர், பாடகர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட சிலம்பரசன், திரை உலகில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமில்லாமல் அவர் எதிர்கொண்ட சவால் மற்றும் அவருடைய பயணம் ரசிகர்களையே வியக்க வைக்கிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் 39 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இவருடைய பிறந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பெஷல் டே ஆக அஜித் மற்றும் விஜய் மாற்ற போகின்றனர். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று அவர் ரசிகர்களுக்காக பத்து தல படத்தில் சிறப்பான ஒரு நடன தொகுப்பை வெளியிடுகிறார் ஏஆர் ரகுமான்.

Also Read: வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்

இதே நாளில் விஜய் படத்தின் முக்கியமான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. இதே நாளில் ஏகே 62-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டைரக்டர் பெயருடன் வெளிவரும் என கூறப்படுகிறது. சிம்பு பிறந்தநாள் அன்று அஜித் விஜய்யும் சேர்ந்து அப்டேட் கொடுப்பது அந்த நாளையே சிறப்பான நாளாக ரசிகர்களுக்கு மாற்றி இருக்கிறது.

இதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை ஏறி குண்டாக மாறிய சிம்பு, கடந்த ஆண்டில் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஒல்லி கில்லியாக வந்தார். இவருடைய உடல் எடை மாற்றம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்தது.

Also Read: விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

அவர் எவ்வாறு உடல் எடையை குறைத்தார், இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியந்தனர். இது குறித்து சிம்புவிடம் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலாக சிம்புவின் பிறந்தநாள் அன்று, அவர் எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த வீடியோவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு அஜித் மற்றும் விஜய் இருவரின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை சிம்புவின் பிறந்தநாளில் கொடுக்கின்றனர். இந்த தகவல் தற்போது சிம்புவின் ரசிகர்களை குஷிப்படுத்துவது மட்டுமின்றி சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ

Trending News