ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஆஹா! இது மோசமான கூட்டணி ஆச்சே.. அஜித்தின் AK-63க்கு கிடைத்த தகவல்

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் வலிமை படம் வெளியானது. இதனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டியது.

இந்நிலையில் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணைந்துள்ளது. Ak 61 படத்தில் அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாக உள்ளது. இப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் செட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது.

இப்படம் தொடங்குவதற்கு முன்பு அஜித் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் லைகா புரோடக்சன் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ak 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆகியுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 63வது படத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவா அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் படங்களை இயக்கியுள்ளார். தற்போது அஜித்துடன் ஐந்தாவது முறையாக சிவா இணைய உள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. Ak63 படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. வலிமை படத்திற்காக இரண்டரை ஆண்டு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு AK 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அஜித்தின் அடுத்தடுத்த பட அப்டேட் ஆல் அவரது ரசிகர்கள் தலைகால் புரியாமல் உள்ளனர்.

Trending News