சச்சின், கங்குலி, ஆசாருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஆல்ரவுண்டர் மரணம்.. அதிர்ச்சியில் மொத்த கிரிக்கெட் வீரர்கள்!

ஓய்வை அறிவித்து குடும்பத்துடன் தனது ரிட்டயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிரிக்கெட் அணியை வளர்த்து விட்ட பெருமை அந்த வீரரையே சேரும். தனது ஆல் ரவுண்ட் திறமையால் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அவருடைய நேர்த்தியான பந்துவீச்சியால் இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி போன்றவர்களை எளிதாக பெவிலியன் அனுப்பி விடுவார். பல இளம் வீரர்களை தனது அணிக்காக உருவாக்கிக் கொடுத்தவர் ஜிம்பாவை நாட்டைச் சேர்ந்த கீத் ஸ்ட்ரீக்.

ஜிம்பாவே அணிக்காக முதலாவதாக டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் 100 விக்கெட் எடுத்த சாதனையை பெற்றவர் கீத் ஸ்ட்ரீக். அதுமட்டுமின்றி இவர் ஒரு லோயர் ஆர்டர் ஆல் ரவுண்டர. தேவைப்படும் நேரத்தில் தனது அணிக்காக சிறந்த பங்களிப்பை அளிக்க கூடியவர்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் 1990 ரண்களும், ஒரு நாள் போட்டியில் 2942 ரண்களும் அடித்து தனது அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இவருக்கு வயது இப்பொழுது 49. கீத் ஸ்ட்ரீக் நீண்ட நாட்களாக லிவர் கேன்சரால் அவதிப்பட்டு வந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இதற்கான ட்ரீட்மென்டை நீண்ட நாட்களாக எடுத்து வந்தார். இப்பொழுது சிகிச்சை பலனின்றி தனது 49 வது வயதிலேயே மரணம் அடைந்துள்ளார். இவர் இந்தியாவுக்கு மட்டும் இன்றி பல அபாயகரமான கிரிக்கெட் வீரர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பவுலிங் செய்வார்.

வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் போன்று மிகவும் நேர்த்தியான தனது அவுட் ஸ்விங் பந்துவீச்சால் இந்திய அணியின் கேப்டன் அசாருதீனை எளிதாக அவுட் செய்து விடுவார். இவர் 2006 ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். அது மட்டும் இன்றி ஜிம்பாவே அணிக்காக பௌலிங் கோச் ஆகவும் செயல்பட்டு வந்தார்.