சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஹைப்பை ஏற்றும் அமரன்.. பல கோடி கொடுத்து ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

Actor Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் சமீபகாலமாக அபரிவிதமான வளர்ச்சி அடைந்து வருகிறார்.அந்த வகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணுகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அமரன் என்று சமீபத்தில் டைட்டில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக எடுத்து உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அமரன் படம் பயோபிக் படமாக உருவாகி வருகிறது.

அதாவது இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜரின் கதையை தழுவி தான் அமரன் படத்தை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.

Also Read : வாய்ப்பு தராத விஜய்.. பழிவாங்க சிவகார்த்திகேயனை வேற லெவலில் உருவாக்கும் இயக்குனர்

இதன் காரணமாக கிட்டத்தட்ட 55 கோடி கொடுத்து அமரன் படத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் 34 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. இதிலிருந்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஏறு முகத்தை நோக்கி செல்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ரிலீசுக்கு முன்பே அமரன் படம் இவ்வளவு கோடி லாபம் பார்த்ததால் தியேட்டரிலும் கோடிகளை அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை அமரன் படம் படைக்க உள்ளது.

Also Read : 24 வருட காதல் மனைவியுடன் 15 வயதில் SK எடுத்த புகைப்படம் இப்ப வைரல்.. அப்பவே லாக் பண்ணிட்டாரு மனுஷன்

Trending News