Actor Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் பண்ணும் படம் தான் அமரன். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படுகிறது.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க வருகிறார். ஆரம்பத்தில் இப்படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் ஆகஸ்ட் 15 வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஏனென்றால் சுதந்திர தினமாக இருப்பதால் ராணுவ வீரரின் படம் வெளியானால் சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால் இப்போது விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிட உள்ளனர். ஏனென்றால் சிவகார்த்திகேயன் படங்கள் எப்போதுமே பண்டிகையை குறி வைத்து தான் வெளியாகும். ஆகையால் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
அமரன் வசூலில் ஏற்பட்ட பிரச்சனை
இதனால் நல்ல வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதிலும் பிரச்சனை இருக்கிறது. அதாவது அமரன் ராணுவ வீரர் பற்றிய படம் என்பதால் முந்தைய காலகட்டத்தில் வெளியான படங்களின் சாயலில் டீசர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகையால் வெளிநாடுகளில் இந்த படத்தை வாங்க யோசனை செய்கிறார்களாம். பொதுவாகவே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஓவர்சீஸ் ரைட்ஸ் அதிகம் கிடைக்கும். ஆனால் இப்போது அமரன் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு படம் ரிலீஸ் செய்யும் போதும் சிவகார்த்திகேயன் பிரச்சனையை சந்தித்து வருகிறார். மேலும் டாக்டர், டான் படங்களுக்கு பிறகு 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்த்தார். இப்போது ஓவர்சீஸ் பிரச்சனையால் எதிர்பார்த்த வசூலை பெறுவது கஷ்டம் தான்.