ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஸ்ரேயாவை ரூம்ல தேமி தேமி அழ வைத்த அமீர்.. ஈகோவை சீண்டியதால் பதிலடி கொடுத்த சம்பவம்

Director Ameer: தமிழ் சினிமாவிற்கு மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற தரமான படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் அமீர். இவர் படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் கராரான ஆளு. அவருக்கு வேண்டியது மட்டும் கிடைக்கவில்லை என்றால் யார் எவர் என்றெல்லாம் பார்க்காமல் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து விடுவார். அப்படித்தான் அமீர் நினைத்தது போல் ஒரு பாடல் அமையவில்லை என்று கடுப்பாகி, பிரபல பாடகியை ரெக்கார்டிங் ரூமில் தேமி தேமி அழ வைத்திருக்கிறார்.

அதுவும் 4 முறை தேசிய விருதைப் பெற்ற சிறந்த பாடகியான ஸ்ரேயா கோஷலை கண்டபடி திட்டி அவரை அமீர் அழ வைத்திருக்கிறார். ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் எல்லாம் இளசுகளின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது. அந்த அளவிற்கு தரமான பல பாடல்களை கொடுத்த அவரை, பருத்திவீரன் படத்தில் ‘ஐயைய்யோ! என் உசுருக்குள்ள..’ என்ற பாடலை பாடுவதற்காக கமிட் செய்திருந்தனர். இதற்காக அமீர் ஸ்ரேயா கோஷலுக்காக இரண்டு வாரங்களாக காத்திருக்கிறார்.

Also Read: மீண்டும் களத்தில் தீயாய் பாயும் அமீர்.. அடுக்கடுக்காக 4 படங்களில் பிஸியாக இருக்கும் வடசென்னை ராஜன்

மும்பையில் இருந்து வந்த ஸ்ரேயா கோஷல் முதலில் பிற மியூசிக் டைரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு 3 பாடல்கள் ரெக்கார்டிங் செய்துவிட்டு, அதன் பின்பு தான் பருத்திவீரன் படத்தில் பாடுவதற்காக வந்துள்ளார். காலையிலிருந்து மூன்று பாடல்களை பாடி முடித்து சோர்வாக இருக்கிறேன் என அமீரிடம் சொன்னதற்கு அவர், ‘இதெல்லாம் என்னுடைய பிரச்சனை இல்லை, எனக்கு தேவை நீங்கள் இந்த பாடலை இப்போதே பாடி கொடுத்தாக வேண்டும்’ என சொல்லிவிட்டார்.

ஏனென்றால் அமீர் ஸ்ரேயா கோஷலுக்காக 2 வாரங்களாக அந்த பாடலை எடுத்து முடித்து விட வேண்டும் என காத்திருந்திருக்கிறார். வந்ததும் அவர் சாக்குப் போக்கு சொன்னதும் அமீருக்கு டென்ஷன் ஆகிவிட்டார். ஒரு வழியாக அவரும் அந்தப் பாடலை பாடி காட்டி இருக்கிறார். ஆனால் அமீருக்கு அதில் திருப்தியே இல்லை. ஏனென்றால் அந்தப் பாடலை பாடுவது 9-வது வகுப்பை மூன்று வருடம் படித்துக் கொண்டிருக்கும் முத்தழகு தான், ஸ்ரேயா கோஷல் இல்லை. இதை நீங்கள் நன்றாக மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அமீர், ஸ்ரேயா கோஷலை கடுமையாக திட்டி இருக்கிறார்.

Also Read: ரகசியமாக சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை முடித்த வெற்றிமாறன்.. கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்

உடனே அவருடைய அம்மா மேனேஜரிடம், ‘எதற்காக இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறார். உடனே அந்த மேனேஜரும் அமீரிடம் பேசி ஸ்ரேயா கோஷலின் நிலைமையை புரிய வைத்தார். ஆனால் அமீர், ‘எனக்கு வேண்டியது கிடைத்தாக வேண்டும், எதற்காகவும் நான் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். வேண்டுமானால் ஸ்ரேயா கோஷலின் சம்பளத்தை கொடுத்துவிட்டு அவரைப் போக சொல்லுங்கள். நான் வேறு ஒரு பாடகி வைத்து இந்த பாடலை எடுத்து முடித்து விடுகிறேன்’ என சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரேயா கோஷலுக்கு அவருடைய ஈகோவை தொட்டது போன்று இருந்தது. இதுதான் தன்னை ஒரு சிறந்த பாடகியாக நிரூபிக்கும் தருணம் என்று, அந்த பாடலை சவாலாக பாடி பதிலடி கொடுத்தார். அந்தப் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த சம்பவத்தை தற்போது அமீர் சமீபத்திய பேட்டில் தெரிவித்திருக்கிறார்.

Also Read: பருத்திவீரன் பார்த்து கோபப்பட்ட கலைஞர்.. பயந்து நடுங்கிய அமீர்

Trending News