செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

Paruthiveeran-Ameer: 17 வருடங்களுக்கு முன்பு நடந்த பருத்திவீரன் பஞ்சாயத்து இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் அதிர்வை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்சனையில் அமீருக்கு ஆதரவாக தான் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனும் இந்த பிரச்சனை குறித்து கருத்து கூறியிருந்தார். மேலும் இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து பேசிய நபர்களில் இவரும் ஒருவர். அதன் காரணமாகவே அவர் அமீர் எந்த அளவுக்கு வேதனைப்பட்டார் என்பதை ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவர் சொல்ல மறந்த விஷயங்களை அமீர் தற்போது வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய நிறுவனம் தணிக்கை செய்த பருத்திவீரன் படத்தை இன்னொரு நிறுவனத்திற்கு உரிமை எழுதிக் கொடுக்கக் கூடிய சூழல் உருவானது.

Also read: ஞானவேல் திமிருக்கு காரணமான 3 பேர்.. “கீ” கொடுத்தால் ஆட்டம் போடும் தலையாட்டி பொம்மை

அதற்கு அரசியல் காரணம் இருப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் கூறப்பட்டது. நானும் அதை உண்மை என்று நம்பினேன். ஆனால் அன்றைய முதல்வர் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். அப்பொழுதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அதேபோன்று இந்த பஞ்சாயத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொடுங்கள் என்று நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பலமுறை அலைந்தேன்.

நீங்கள் அதைப் பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். அதேபோன்று இந்த விவகாரத்தில் சிவக்குமார் எங்கள் அழைப்பை ஏற்க மறுக்கிறார். ஞானவேல் ராஜா கட்டுப்படவில்லை என்று சொன்னீர்கள். அதையும் அந்த பேட்டியில் சொல்ல மறந்து விட்டீர்கள். நல்லான் வகுத்ததா நீதி இங்கு வல்லான் வகுத்ததே நீதி.

தயாரிப்பாளர் சங்கத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யான பிறகு தான் நீதிமன்றத்தை நாடினேன். மேலும் பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு சூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக் கொள்ளுங்கள் என சிவகுமார் கூறியதாக சொல்லி இருந்தீர்கள். ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை.

Also read: புயலால அமுங்கி போன பருத்திவீரன் பஞ்சாயத்து.. தயாரிப்பாளரால் வெளிவந்த சிவகுமாரின் சுயரூபம்

என்னை யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை. சந்திக்கவும் இல்லை என்பதுதான் உண்மை. அதே போல் பருத்திவீரனால் லாபம் அடைந்த ஞானவேல் ராஜா அமீருக்கு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தரவேண்டும் என கூறியிருந்தீர்கள். நான் யாரிடமும் யாசகம் கேட்கவில்லை என்னுடைய உரிமையை தான் கேட்கிறேன் என்று தன்னுடைய 17 வருட வலியை அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரச்சனை இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Trending News