சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கடத்தல் விவகாரத்தில் சிக்கிய அமீரின் கூட்டாளி.. அதிர்ந்து போன சம்பவம்

Director Ameer : பருத்திவீரன் பட இயக்குனர் அமீர் தன்னுடன் பணியாற்றிய நபர் தவறான கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள அமீர் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் தான் ஜாபர் சாதிக். மேலும் இவர் அமீருடன் சில நிறுவனங்களையும் இணைந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென ஜாபர் சாதிக் தவறான கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவரை போலீசார் தேடி வரும் நிலையில் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து இப்போது அமீர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது இறைவன் மிகப்பெரியவன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கடந்த 22 ஆம் தேதி நின்று போனது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் வழியாக தெரிந்து கொண்டேன் என்று அமீர் கூறியிருக்கிறார்.
Also Read : சூர்யாவுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. பாலாவை விட்டுட்டு அமீர் கூட சண்டை போட இதுதான் காரணம்

அதோடு இந்த சம்பவம் பற்றி தெளிவாக தற்போது வரை தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தி உண்மையாக இருந்தால் அவர்களை கண்டிக்க மற்றும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் தொடர்ந்து நான் பணியாற்ற மாட்டேன் என்று அமீர் கூறியிருக்கிறார்.

மேலும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களோடு சமரசமாக போனால் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திற்கு எப்போதுமே நான் விதிவிலக்கானவன் என்பது எல்லோருக்குமே தெரியும். எந்த குற்றச் சம்பவங்களுக்கும் நான் எப்போதும் துணை போக மாட்டேன் என்று அமீர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
Also Read : சூர்யாவை விட பெரிய மனசு என நிரூபித்து காட்டிய அமீர்.. மிக்ஜாம் புயலுக்கு வாரி வழங்கிய ராஜன்

Trending News