வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலை பேசவிடாமல் குறுக்கிட்டு பேசிய அமிதாப் பச்சன்.. அதிர்ச்சியில் உறைந்த உலகநாயகன்

Kamal Haasan – Amitabh Bachchan: உலக நாயகன் கமலஹாசன் தற்போது அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார். இந்தியன் 2 பட வேலைகளை முடித்துவிட்டு தற்போது அமெரிக்கா சென்றிருக்கிறார் இவர். நேற்றைய முன்தினம் அமெரிக்காவில் கமலஹாசனின் அடுத்த படமான கல்கி திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. இந்த படத்தில் கமலுடன் அமிதாப்பச்சன் மற்றும் பிரபாஸ் இணைந்து நடிக்கிறார்கள்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதா பச்சனை பொருத்தவரைக்கும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் அவருக்கு எப்போதுமே நெருங்கிய நட்பு உண்டு. தற்போது இவர் கமலுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டு விழாவில் கமல் பேசும் பொழுது அமிதாப் குறுக்கிட்டு பேசிய விஷயம் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

Also Read:வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்.. உலகநாயகன் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா?

இந்த நிகழ்ச்சியின் பொழுது கமல் ரொம்பவே உற்சாகமாக காணப்பட்டார். மேலும் நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் பிரபாஸ் இருவரையும் பற்றி பேசும் பொழுது, அவர்களுடைய சமீப கால படங்களை பற்றி பேசி, நடிப்பு திறமையை பாராட்டி இருந்தார் கமல். அப்போது கமலை பேசவிடாமல் அமிதாப் குறுக்கிட்டு பேசினார். இது கமலுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

அமிதாப்பச்சன், கமலஹாசனிடம் முதலில் இது போன்று எளிமையாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லாரையும் விட சிறந்தவர் என்று சொன்னார். அமிதாப் அப்படி சொன்னது கமலுக்கு சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது. கமல் போன்ற ஒரு சிறந்த நடிகன் தங்களுடைய நடிப்பை பாராட்டுவது என்பது அவருடைய எளிமையை காட்டுவதாக அமிதாப் இப்படி சொல்லி இருக்கிறார்.

Also Read:கமல் என்சைக்ளோபீடியானு சும்மா சொல்லல.. அவர் தொடாத இடமே இல்ல, ஆல்ரவுண்டராக இருக்க முக்கியமான 9 காரணங்கள்

ப்ராஜெக்ட் கே என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த படத்திற்கு தற்போது கல்கி 2898 AD என பெயரிடப்பட்டிருக்கிறது. அமிதாப்பச்சன் மற்றும் பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் கமல் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே இணைந்திருக்கிறார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அடுத்து இந்தியன் 2 திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கமல் எச் வினோத்துடன் இணைந்து தன்னுடைய 233 வது படம் மற்றும் தன்னுடைய வெற்றி இயக்குனரான மணிரத்தினத்துடன் இணைந்து 234 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read:எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

Trending News