வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மரண படுக்கை வரை கமலுடன் சேர்ந்து நடிக்காமல் போன நடிப்பு அரக்கன்.. நாயகனில் வாய்ப்பு கிடைத்தும் மறுத்த காரணம்

Actor Kamal: இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே என அடுத்தக்கட்ட படங்களில் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாய் தன் நடிப்பிற்கு தீனி போட்டு வருபவர்தான் உலகநாயகன் கமலஹாசன். இந்நிலையில் இவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றும் அவற்றை நிராகரித்த நடிப்பு அரக்கன் யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

கமலின் தத்ரூபமான நடிப்பில் 1987ல் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட படம் தான் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில், வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல் தன் மகத்தான நடிப்பினை வெளிக்காட்டி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றார். மேலும் இப்படம் 175 நாள் திரையில் ஓடி சாதனை கண்டது.

Also Read: விஜய், அஜித்துக்கு கதை தயார் செய்த இயக்குனர்.. கனவுகள் நிறைவேறாமல் இறந்த சம்பவம்.!

இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் மணிரத்னம். அவ்வாறு கமலின் மருமகன் கதாபாத்திரத்தில் நாசர் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று சிறப்புற நடித்திருப்பார். முதலில் இக்கதாபாத்திரத்திற்கு மணிரத்னம் ரகுவரனை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

மணிரத்னத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரகுவரனும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதன் பின் கதை கேட்ட ரகுவரன், இவை போலீஸ் கதாபாத்திரம் என்பதால் வேண்டாம் என நிராகரித்து விட்டாராம். அதன் பின் கமல் சென்று அழைத்தும், ரகுவரன் இக்கதாபாத்திரத்தை ஏற்கவில்லை.

Also Read: இருக்கிற பிரச்சனையில் ஏழரையை கிளப்பிய ஐஸ்வர்யா.. கதிகலங்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அதன் காரணம் என்னவென்றால், போலீஸ் கெட்டப் என்பதால், தன் ஹேர் ஸ்டைலை திருத்த வேண்டும் என கூறியதன் காரணமாக இப்படத்தை ஏற்க மறுத்திருக்கிறார் ரகுவரன். தன் ஹேர் ஸ்டைலை ஒரு பொழுதும் மாற்ற விரும்பாத இவர் கமல் படத்தையே நிராகரித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவர் கமல் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையே பெறவில்லையாம். அவ்வாறு மரணப்படுக்கை வரை உச்ச நடிகராய் வாழ்ந்த ரகுவரன் ஒரு படம் கூட கமல் உடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சரியும் லெஜெண்ட் அண்ணாச்சியின் சாம்ராஜ்யம்.. அந்த ஒரு மோகத்தால் சந்தி சிரிக்கும் பிரச்சனை

Trending News