புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாய்ப்புக்காக அந்தரங்க தொல்லையை சகித்த திரிஷா.. கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் உள்ளூர் கிழவி

Actress Trisha: நடிக்க வந்து 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அதே இளமை மாறாத அழகுடன் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அம்மணி தான் ஹீரோயின்.

இப்படி 40 வயதை தாண்டிய போதும் இன்னும் சிங்கிளாக சுற்றி வரும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வனில் குந்தவையாக ரசிகர்களை சொக்க வைத்த இவருடைய அழகும், நடிப்பும் தான்.

Also read: திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

இந்நிலையில் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளான பிரபலங்களில் ஒருவரான மீரா மிதுன், திரிஷா பற்றி கூறியிருக்கும் ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது. ஒரு சில படங்களில் தலையை காட்டி விட்டு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்து வந்த மீரா மிதுன் ரசிகர்களால் உள்ளூர் கிழவி, அரைவேக்காடு என கலாய்க்கப்பட்டார்.

ஆனாலும் தன்னால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்ற பொறாமையில் இவர் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகளை பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். அந்த வகையில் இவர் திரிஷாவுடன் ஒரு படத்தில் சிறு கேரக்டரில் நடித்த போது நடந்த சம்பவத்தை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

Also read: சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

அதாவது அந்த பட படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் ஒருவர் திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் அதாவது அந்தரங்க இடத்தில் தொட்டு விளையாடியதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இது திரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வாய்ப்பு பறிபோய் விடுமே என்ற ஒரு காரணத்திற்காக அவர் அமைதியாக இருந்ததாகவும் மீரா மிதுன் கூறியுள்ளார்.

இதை பார்க்கும் போது தனக்கு அருவருப்பாக இருந்ததாகவும், முன்னணி நடிகைகளுக்கே இந்த கதி என்றால் மற்ற நடிகைகளின் நிலை எப்படி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை திரிஷாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த இந்த உள்ளூர் கிழவி தற்போது கூறி இருக்கும் விஷயத்தால் சில எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார்.

Also read: சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

Trending News