செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாராவை நக்கல் செய்த நடிக்க தெரியாத நடிகை.. அசிங்கப்படுத்திய லேடி சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகைகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து அனைத்து ஹீரோக்களுடன் நடித்து கடைசியில் கல்யாணம் செய்து சினிமாவை விட்டு சென்று விடுவார்கள். தற்போது பல வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

எந்த நடிகையாக இருந்தாலும் இவர் மீது பொறாமையில் இருப்பார்கள் என்பது நிச்சயம். அந்த அளவிற்கு இவரது வளர்ச்சி இவரது நடிப்பு மற்றும் இருவர் சம்பளம் என எல்லாம் உயர்ந்து கொண்டே செல்கிறது. கவர்ச்சியை மட்டுமே வைத்து நடிக்க வந்த நயன்தாரா திடீரென தனக்கான பாதையை உருவாக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் மற்ற ஹீரோயின்களுக்கு இதுபோல் வாய்ப்புகள் கிடைக்காமல் இவர் மீது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்கள்.

Also Read : மாயா பட எதிர்பார்ப்பை நயன்தாராவின் கனெக்ட் பூர்த்தி செய்ததா.? பயமுறுத்தும் ட்விட்டர் விமர்சனம்

அப்படி சமீபத்தில் இரண்டு படத்தில் நடித்த மாளவிகா மோகன் அதில் ஒரு படம் மாஸ்டர் அது விஜய்க்காக ஓடியது அதற்கப்புறம் சொல்லும்படியாக எந்த படமும் இவருக்கு அமையவில்லை. இவர் சமீபத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஒரு ஹாஸ்பிடல் காட்சியில் லிப்ஸ்டிக் போட்டு விட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். எந்தக் காட்சிக்கு என்ன மேக்கப் போடும் என்பது கூட தெரியாமல் அவர் என்று சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்று நக்கல் எடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டியில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்ய முடியும். மொட்டை அடித்து விட்டு நடிக்க சொன்னாலும் மொட்டை அடித்து நடிப்பேன் எனக்கு நடிப்பு முக்கியம் அந்த சீனில் நடிக்க சொன்னது டைரக்டர் நான் நடித்துக் கொடுத்தேன் இதில் என்ன தவறு இருக்கிறது. இதைப் போய் பெரிதாகப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.

Also Read : சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்

நயன்தாரா மீது பல நடிகைகள் பொறாமையில் இருப்பார்கள் பல பேட்டிகளில் அதை வெளிப்படுத்துவார்கள் எடுத்துக்காட்டாக திரிஷா, நயன்தாராவை பற்றி பேசினாலே கோபப்படுவார். இருந்தாலும் அவரும் பெரிய நடிகையாக இருப்பதால் பெரிதாக இது தெரியவில்லை இதை மாளவிகாவின் பேசும்போது இவர் பொறாமையில் பேசுகிறார் என்பது மட்டுமே தெரிகிறது.

மாளவிகா மோகன் மாஸ்டர் படத்திற்கு பிறகு பெரிய படங்கள் எதுவும் அமையாமல் நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சி உடையில் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை போட்டு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். மற்றும் பா ரஞ்சித் இயக்கும் விக்ரம் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த மாளவிகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்படி இருக்க இவர் எப்படி நடிக்க வேண்டும் எப்படி மேக்கப் போட வேண்டும் என்று நயன்தாராவிற்கு சொல்வது யாராக இருந்தாலும் சிரிப்பு தான் வரும்.

Also Read : உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

Trending News