வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி, கமல் சேர்ந்து ஐந்து ஸ்டார்கள் உடன் நடித்த நடிகை.. 50 ஃப்ளாப் கொடுத்த சோகம்

Rajini – Kamal : சினிமாவில் உள்ள டாப் ஸ்டார்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல முன்னணி ஹீரோயின்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி ஸ்டார்களுடனும் நடித்த நடிகை ஒருவர் ஃபீல்ட் அவுட் ஆகி இருக்கிறார்.

கிட்டத்தட்ட அவர் நடித்த 50க்கும் மேற்பட்ட படங்கள் ஃபிளாப் ஆகி உள்ளது. பம்பாய் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மனிஷா கொய்ராலா தான் அவர். கமலுடன் இந்தியன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா ரஜினியுடன் பாபா படத்தில் நடித்திருந்தார். இந்தியன் படம் சூப்பர் படமாக அமைந்த நிலையில் பாபா தோல்வியை தழுவியது.

மேலும் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என முன்னணி நட்சத்திரங்கள் மூவருடனும் பணியாற்றிய பெருமை மனிஷா கொய்ராலாவுக்கு இருக்கிறது. அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை, அதன்பிறகு மதுக்கு அடிமையாகி இருந்ததால் மனிஷா கொய்ராலா கேரியரை தொலைத்தார்.

Also Read : லாரன்ஸ்- ரஜினி போட்ட ஒப்பந்தம்.. மகள்களுக்காக ஆலமரம் போல் நிற்கும் தலைவர்

அதன் பிறகு சில வருடங்களிலேயே அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதற்காக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். அதோடு சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பாழானதற்கு காரணமாக இருந்தது பாபா படம் தான் என்று மனிஷா கொய்ராலா கூறியிருந்தார்.

அதாவது பாபா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்ததால் அப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்தப் படம் தான் நான் ஹீரோயினாக நடித்த கடைசி தமிழ் படம். அதன் பிறகு தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட 50 தோல்வி படங்களை மனிஷா கொய்ராலா கொடுத்திருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

Trending News