ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்தியாவை கலக்கப்போகும் வேகப்பந்து ஆல்ரவுண்டர்.. யுவராஜ் சிபாரிசில் உருவாகும் கபில்தேவ்

கிரிக்கெட் விளையாட்டில் இப்பொழுது ஆல்ரவுண்டர்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். எல்லா அணிகளும் 5 முழு நேர பேட்ஸ்மேன்கள், 2-3 ஆல்ரவுண்டர்களை வைத்து அசால்டாக போட்டிகளை ஜெயித்து வருகிறது. அதிக ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ள நாடு இங்கிலாந்து அனிதான்.

ஒரு காலத்தில் தென் ஆபிரிக்க அணி, அதிக ஆல்ரவுண்டர்களை வைத்துக் கொண்டு எதிர் அணிகளை மிரட்டி வந்தது. அந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி மற்ற அணிகளும், ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இப்பொழுது இந்திய அணியும் ஆல்ரவுண்டர்களை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மார்க்க ஸ்டாய்னிஸ், பென் ஸ்டோக்ஸ், ஜிம்மி நீசம், போன்ற ஆல்ரவுண்டர்ள் எப்பொழுதுமே எதிரணியினருக்கு ஒரு தலைவலியாக இருப்பார்கள். பேட்டிங் இல்லை பவுலிங் ஏதாவது ஒன்றில் தங்களது திறமையை நிரூபித்து அசத்தி விடுவார்கள். இப்படி ஆல்ரவுண்டர்கள் இருப்பது ஒவ்வொரு அணிக்கும் ஒரு கூடுதல் பலமே.

இந்தியாவைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா மட்டுமே வேகப்பந்து வீச்சி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். ஆல்ரவுண்டர் வரிசையில் அடுத்ததாக வெங்கடேச ஐயர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவரும் ஒரு வேகப்பந்து வீச்சி ஆல்-ரவுண்டர் ஆவார். குறிப்பாக இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டம் ஆட கூடிய வீரர்கள்.

இப்பொழுது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாரிசு இந்திய அணியில் விளையாட தயாராகிவிட்டது. அவருக்கு கடினமான பயிற்சியாளரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் இவரது விளையாட்டு விஷயத்தில் கொஞ்சம் கூட கருணை காட்டுவது இல்லையாம்.

Yograj
Yograj

ஏற்கனவே 19 வயதிற்கு கீழ் உள்ள வீரர்கள் பட்டியலில் கலக்கி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் இப்பொழுது யோகராஜ் சிங் பயிற்சியில் பயங்கரமான ஆல்-ரவுண்டராக உருவாகி விட்டாராம். கூடிய விரைவில் அடுத்த கபில் தேவை இந்திய அணியில் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார் யுவராஜ் தந்தை யோகராஜ் சிங். தனது தந்தையிடம் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு அர்ஜுன் டெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் தான் அறிவுரை கூறியிருக்கிறார்.

Trending News