செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் முக்கியமான சீரியல்.. டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியலுக்கும் இந்த நிலைமையா?

Sun Tv Serial: சன் டிவி சீரியலுக்கு மக்கள் என்னதான் பேராதரவு கொடுத்து வந்தாலும் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலையும் மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இப்படியே போனால் சின்னத்திரையில் சன் டிவி இரண்டாவது இடத்துக்கு போயிட்டு விஜய் டிவி முதல் இடத்தை பிடித்து விடும்.

ஏனென்றால் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி தான் தற்போது முந்திக் கொண்டு வருகிறது. அதனால் தற்போது சன் டிவி சேனல் கொஞ்சம் பழைய சீரியல்களில் மொக்கையாக எது போய்க்கொண்டிருக்கிறது, மக்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் எந்த சீரியலுக்கு கொடுத்து வருகிறார்களோ அதை கொஞ்சம் கொஞ்சமாக முடிவு கட்டிவிடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

பழைய சீரியலை ஓரம் கட்டி வரும் சன் டிவி சேனல்

அந்த வகையில் கிட்டத்தட்ட 1000 எபிசோடை தாண்டி வரும் சுந்தரி சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி பயணித்து வருகிறது. இதை முடித்துவிட்டு மூன்று முடிச்சு என்ற புது நாடகம் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். அதே மாதிரி சுந்தரி சீரியலை தொடர்ந்து தற்போது இன்னொரு முக்கியமான சீரியலும் முடிவுக்கு வரப் போகிறது. அந்த வகையில் அதற்கான கிளைமேக்ஸ் தேதியை முடிவு பண்ணி விட்டார்கள்.

அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் அந்த நாடகத்தின் இறுதி அத்தியாயமாக இருக்கப் போகிறது. அந்த சீரியல் அண்ணன் தங்கையின் பாசமலர்களை வைத்து கிட்டத்தட்ட 1100 எபிசோடுகளையும் தாண்டி வரும் வானத்தைப்போல சீரியல் தான். இதில் துளசி மற்றும் சின்ராஸின் பாசத்துக்கு நடுவில் யார் வந்தாலும் அண்ணன் தங்கையின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பொன்னி கடைசியில் சரணடைய போகிறார்.

அந்த வகையில் இந்த நாடகம் கிளைமாக்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் என்னதான் இந்த நாடகத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து போர் அடிக்குது என்று கமெண்ட்ஸ் செய்து வந்தாலும், தற்போது வரை இந்த ஒரு சீரியல் சன் டிவியில் டாப் 5 இடத்தை தக்க வைத்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் இதற்கான முடியும் நேரம் வந்துவிட்டது என்பதால் இந்த மொத்த நாடகத்திற்கும் பூசணிக்காய் உடைத்து சுபம் போடப் போகிறார்கள்.

இந்த நாடகமும் சரி, சுந்தரி சீரியலும் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வருவதால் மக்களை கவரக்கூடிய வகையில் புது நாடகங்கள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கான முக்கியத்துவம் கொடுத்து புத்தம் புது சீரியல்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மூன்று முடிச்சு சீரியல் தொடர்ந்து இன்னொரு புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது.

Trending News