புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எம்ஜிஆராக மாறிய முரட்டு வில்லன்.. 200 சதவீதம் பொருந்திப் போன கெட்டப், மிரண்டு போன படக்குழு

Mgr: அரசியல், சினிமா என இரண்டிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய எம்ஜிஆர் இறந்த பிறகும் கூட மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அதிலும் அவரை ரோல் மாடலாக வைத்து தங்களுடைய பயணத்தை தொடங்கிய பல ஜாம்பவான்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முரட்டு வில்லன் ஒருவர் அச்சு அசல் எம்ஜிஆர் ஆகவே மாறி ஷாக் கொடுத்திருக்கிறார்.

அதாவது கார்த்தி வா வாத்தியாரே என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். தலைப்பை பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்து இருக்கும் இதில் எம்ஜிஆருக்கும் ஒரு ரோல் இருக்கிறது என்று. அதன்படி அவர் பற்றிய பின்னணி ஆகத்தான் இப்படம் உருவாகி வருகிறதாம். ஆனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை சி ஜி முறையில் கொண்டு வருவதற்கு பட குழு தயங்கி இருக்கின்றனர்.

ஏனென்றால் சில சமயம் இது சொதப்பி காமெடியாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த காரணத்தினால் அவர்கள் இப்போது முரட்டு வில்லன் ஒருவரை வாத்தியாராக நடிக்க வைத்திருக்கின்றனர். அந்த வில்லன் வேறு யாரும் கிடையாது பாட்ஷா படத்தில் ரஜினியையே கட்டி வைத்து அடித்த ஆனந்தராஜ் தான்.

ஏற்கனவே நல்ல கலராக இருக்கும் இவர் எம்ஜிஆர் கெட்டப் போட்டு தகதகவென மின்னுகிறாராம். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரை பார்த்த பலரும் ஒரிஜினல் வாத்தியாரே வந்துவிட்டாரோ என இன்ப அதிர்ச்சியுடன் மிரண்டு போய் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆர் கெட்டப் அவருக்கு 100 அல்ல 200 சதவீதம் பக்காவாக பொருந்தி போயிருக்கிறதாம்.

அதேபோல் கார்த்தியும் படத்தில் எம்ஜிஆர் கெட்டப் போட்டிருக்கிறார். கதைப்படி வாத்தியார் போல் வளர வேண்டும் என்ற தாத்தாவின் ஆசைக்கு மாறாக அவர் நம்பியார் போல் இருப்பாராம். அதே சமயம் ஆனந்த்ராஜ் தன்னை எம்ஜிஆர் ஆகவே நினைத்துக் கொண்டு அதே கெட்டப்பில் வாழ்ந்து வருவாராம்.

இப்படியாக பயணிக்கும் கதையில் இவர்கள் இருவரின் தோற்றமும் அம்சமாக பொருந்தி இருப்பதில் இயக்குனர் பயங்கர ஹேப்பியாம். ஆனாலும் படம் வெளிவந்த பிறகு எம்ஜிஆரின் ஜெராக்ஸ் போல் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அந்த வகையில் ஆனந்தராஜ் இந்த தோற்றத்தில் எப்படி இருப்பார் என்பதை காணும் ஆர்வமும் ஒரு பக்கம் இருக்க தான் செய்கிறது.

Trending News