சினிமாவில் ஒருவர் பிரபலமாகி விட்டால் அவர்களை பற்றிய பல கிசுகிசுக்கள் வெளிவருவது உண்டு இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் சமீபகாலமாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்வைப் பற்றி புட்டு புட்டு வைக்கிறார்.
மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக திரைக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்களைப் பற்றியும் இவர் யூடியூபில் தற்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு எதிராக பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் இவர் தன்னுடைய பேச்சையும், விமர்சனங்களையும் நிறுத்துவது கிடையாது.
தற்போது இவர் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன் என்று பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நான் யூ டியூபில் வெளியிடும் செய்திகளை பற்றி பல அவதூறுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் சொல்வது கிடையாது. நீங்கள் பார்க்கும் திரைக்குப் பின்னால் பல நிகழ்வுகள் இருக்கிறது.
அதைதான் நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். சினிமாவில் யாரும் ஒழுக்கம் கிடையாது அவர்களை பற்றி தான் நான் பேசுகிறேன். அவை எல்லாவற்றுக்கும் என்னிடம் சாட்சி இருக்கிறது. எம் என் நம்பியார், சிவகுமார், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பலரை பற்றி நான் பேசுவதே கிடையாது. அவர்கள் அனைவரும் ஒழுக்கமாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள்.
நான் காசுக்காக, புகழுக்காக அசிங்கமான நடவடிக்கைகளையும், அருவருப்பான போட்டோக்களையும் வெளியீட்டு கொண்டிருப்பவர்களை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். திரைமறைவில் ஒரு வாழ்க்கையை வாழும் அவர்களை ஒரு வழிகாட்டியாக ரசிகர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே தான் நான் இந்த விஷயங்களைப் பற்றி பேசுகிறேன். இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது.
பல ரசிகர்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் ஒரு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் என்னை பார்த்து பின்னி பெடல் எடுக்குறீங்க அண்ணே உங்கள் துணிச்சல் யாருக்கும் வராது என்று என் கையை பிடித்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் அங்கு விழாவில் உள்ள அனைவரிடமும் கூறினார்.
ஒருவேளை நான் கூறுவது பொய்யாக இருந்தால் அவர் இப்படி என்னை பாராட்டி இருப்பாரா. அப்படி நான் அவதூராக பேசினேன் என்றால் என் மீது வழக்குப் போடுங்கள். உங்களின் அழுக்குகளை துவைக்கும் சலவையாளன் நான். நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் நான் அவர்களைப் பற்றி பேச மாட்டேன். சினிமாவில் இருக்கும் நாம் தான் அவர்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.