செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதல் பாதி டப்பிங்கில் அரண்டு போய் விட்டேன்.. விக்ரம் படத்தில் மறக்கமுடியாத அனுபவத்தை ஷேர் செய்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் தான் விக்ரம். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கமலுக்கு வேற லெவல் ரீ என்ட்ரி படமாக அமைந்தது. இப்போது பாக்ஸ் ஆபிஸை கலக்கும் டாப் நடிகர்களே மிரண்டு போகும் அளவுக்கு இருந்தது கமலின் மறுபிரவேசம்.

அதைத்தொடர்ந்து அவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.

Also Read: இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

அதாவது விக்ரம் திரைப்படத்தின் முதல் பாதியில் கமல் வரும் காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் கமல் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. அதன்படி இடைவெளிக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கமலின் தரிசனம் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்தக் காட்சி இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் காட்சியாக இருக்கிறது.

அந்த வகையில் விக்ரம் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் லோகேஷ் முதல் பாதியை நினைத்து மிகவும் பயந்து இருக்கிறார். ஏனென்றால் கமலுக்காக படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸ் முதல் பாதியில் அவரை அதிகமாக காட்டவில்லை என்று அதிருப்தி அடைந்து விடுவார்களோ என்று அவர் கவலையுடன் இருந்திருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து படத்தை இயக்கியிருக்கிறார்.

Also Read: அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்.. நீங்க வேற லெவல்ல யோசிக்கிறீங்க ப்ரோ!

அப்போது படத்தின் சூட்டிங் முடிவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் கமல் லோகேஷிடம் முதல் பாதிக்கான டப்பிங் நான் பேசுகிறேன் என்று கேட்டிருக்கிறார். அதைக் கேட்டு லோகேஷ் ரொம்பவும் அரண்டு போயிருக்கிறார். ஏனென்றால் முதல் பாதியில் கமலுக்கான வசனம் ஒரே ஒரு வார்த்தை தான். இதனால் அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி கொண்டு இருந்திருக்கிறார்.

ஆனால் கமல் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் டப்பிங் வேலையை ஆரம்பித்து இருக்கிறார். அதன் பிறகு படமும் வெளியானது. லோகேஷ் எந்த ஒரு வார்த்தையை நினைத்து பயந்தாரோ அந்த ஆரம்பிக்கலாங்களா என்ற வார்த்தை தான் தற்போது குழந்தைகள் முதல் அனைத்து ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது. இந்த வேடிக்கையான சம்பவத்தை லோகேஷ் ஒரு விழாவின்போது நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

Also Read: அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்

Trending News