சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மிஷ்கின் மேல் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் ஆண்ட்ரியா.. கூட இருக்கிறவங்களை இப்படி செய்யலாமா.?

அரண்மனை படத்தில் பேயாக நடித்த பிறகு ஆண்ட்ரியா தொடர்ச்சியாக அதுபோன்ற கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வந்த பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்தப்படம் ஆரம்பிக்கப்படும் பொழுதே படக்குழு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி வந்தது. அதிலும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் அதிகம் பேசப்படும் என்றும், இந்த படத்தில் அவர் 15 நிமிடங்கள் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார் என்றும் பரபரப்பை கிளப்பியது.

இதனால் ரசிகர்கள் பலரும் இந்தப் படம் குறித்த அப்டேட்டுகள், டீசர் போன்றவற்றிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதற்கு ஏமாற்றம் தரும் வகையில் இருந்தது பிசாசு 2 பட டீஸர். டீசர் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே சோசியல் மீடியா பரபரப்பாக இருந்தது.

ஆனால் டீசர் வெளியான பிறகு அந்த ஆர்வம் அனைத்தும் காற்று போன பலூன் ஆகிவிட்டது. ஆண்ட்ரியாவை படு மிரட்டலாக எதிர்பார்த்த ரசிகர்கள் இந்த டீசரை பார்த்து காமெடியாக இருப்பதாக தற்போது அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் அவருடைய மேக்கப்பும் பேய் பொம்மை போல் இருப்பதாக பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

பல வருடங்களாகவே சினிமாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆண்ட்ரியா பல துணிச்சலான காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். ஆனால் அவருக்கான இடம் மட்டும் இன்னும் கிடைக்கவே இல்லை. அதனால் அவர் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார்.

தற்போது ரசிகர்களின் கேலி, கிண்டலை பார்த்த ஆண்ட்ரியா இயக்குனர் மிஸ்கின் மீது உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறாராம். ஏனென்றால் படத்தில் பல சவாலான காட்சிகளில் அவர் நடித்திருக்கிறாராம். ஆனால் அதையெல்லாம் காட்டாமல் தன்னுடைய நண்பர்களே கலாய்க்கும் அளவுக்கு ஆகி விட்டதே என்று அப்செட்டில் இருக்கிறாராம்.

மேலும் டீசரை வைத்து முடிவு பண்ண வேண்டாம். படம் வெளியான பிறகு என்னுடைய நடிப்பு நிச்சயம் பேசப்படும். சில காட்சிகள் சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்பதால் தான் இயக்குனர் டீசரில் அதை காட்டவில்லை என்று அவர் தன் நண்பர்களிடம் சமாளித்து வருகிறாராம்.

Trending News