வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பயந்து நடுங்கி மறுத்த ஆண்ட்ரியா.. வற்புறுத்தி அவ்ளோநேரம் முழுநிர்வாணமாக நடிக்க வைத்த இயக்குனர்

பாடகியாக அறிமுகமாகி தன்னுடைய திறமை மூலம் தற்போது நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களின் மூலம் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார். இப்போதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு திகில் படமாக வெளியானது பிசாசு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் முயற்சியில் மிஸ்கின் இறங்கியிருந்தார். பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்து உள்ளார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றியதை பற்றி ஆண்ட்ரியா பேட்டி ஒன்று அளித்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தேன்.

அப்போது பிசாசு 2 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. அப்போது படத்தின் இயக்குனர் மிஷ்கின் கதையை கூறினார். மேலும் இப்படத்தில் 15 நிமிடம் ஆடையின்றி நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார். இதற்கு முதலில் நான் மறுப்பு தெரிவித்தேன் என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

ஆனால் என்னை கட்டாயப்படுத்தினார்கள். மேலும் கதை நன்றாக இருந்ததால் வேறு வழியின்றி சம்மதித்தேன் என ஆண்ட்ரியா கூறியுள்ளார். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருப்பதாகவும் இது மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆண்ட்ரியா வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். கதை அழுத்தமாக இருந்தால் எப்படியும் நடிக்கலாம் என்ற எண்ணம் ஆண்ட்ரியாவுக்கு உள்ளதோ என்னவோ. மேலும் பிசாசு 2 படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

Trending News