2021 ஆண்டு முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இந்திய அணிக்காக இளம் அதிரடி வீரர்கள் பலரை உருவாக்கித் தந்தார் ராகுல். சூர்யா குமார் யாதவ், கே எல் ராகுல், ரிங்கு சிங் ,சுப்மன் கில், இஷான் கிஷான் போன்றவர்களை உருவாக்கியவர் டிராவிட்.
2024- 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பின் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைகிறது. அவர் விருப்பப்பட்டால் மீண்டும் பயிற்சியாளராக வர விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
பதவி காலத்தை நீட்டிக்க விரும்பாத டிராவிட்
ஆனால் ராகுல் டிராவிட் விருப்ப ஓய்வு பெறுவார் என்று தெளிவாக தெரிகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளராக விண்ணப்பிக்க விரும்பவில்லை. ராகுல் டிராவிட்டின் மகன் சமித்திற்கு 18 வயதாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில்14 வயதிற்கு உண்டான அணியில் விளையாடி வந்தார்.
சமித்திரக்கு இப்பொழுது 19 வயதிற்கு உண்டான பட்டியலில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.அவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட் அவருடன் நேரம் செலவழிக்க விரும்புவதாக ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதனால் மீண்டும் பயிற்சியாளராக விண்ணப்பிக்க யோசிக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் நிகில் சோப்ரா விண்ணப்பித்துள்ளார். அவருடன் சேர்ந்து கோவக்கார ஆக்ரோஷமான வீரராகிய கௌதம் கம்பீரூம் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா பரிந்துரைத்து நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.