வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜவான், பதானை பதம் பார்த்து வரும் அனிமல்.. 6 நாளில் செய்த வசூல் வேட்டை

Animal Collection : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் அனிமல் படம் உருவாகி இருந்தது. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

அந்த வகையில் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 116 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில் பாலிவுட்டில் வசூல் மன்னனாக ஷாருக்கான் தான் வலம் வந்து கொண்டிருந்தார். அதன்படி பெயரை வாங்கி கொடுத்தது பதான் மற்றும் ஜவான் படங்கள் தான். அதாவது பதான் படம் கிட்டத்தட்ட 1000 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் ஜவான் படம் குறைந்த நாட்களிலேயே கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை கடந்தது. இந்த படங்களை ஓரம் கட்டும் அளவிற்கு அனிமல் படத்தின் வசூல் அசுர வேட்டையாக இருக்கிறது. அதாவது படம் வெளியாகி நேற்றுடன் ஆறு நாட்கள் மட்டும் தான் ஆகியிருக்கிறது.

Also Read : விஜய்யை நம்பினா வேலைக்காகாது.. பெரிய திமிங்கலத்தை லாக் செய்த அட்லி- ஷாருக்கான்

இப்படி இருக்கும் சூழலில் அனிமல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இதுவரை 527.6 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. ஆகையால் இப்போதும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதால் படம் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அனிமல் படம் ஆயிரம் கோடியை தாண்டும் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. பாலிவுட் சினிமா கடந்த சில வருடங்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. மேலும் அனிமல் படத்தின் 1000 கோடி வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

Animal-collection
Animal-collection

Also Read : அனிமல் படத்தின் 2ம் நாள் கலெக்சன்.. இந்தி திரை உலகை மிரட்டி விட்ட ரன்பிர் கபூர்

Trending News