தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகி காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.இவர்களது திருமணம் தொடர்பான செய்திகள் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில்,தற்போது திருமண வரவேற்பு நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரீஸ் நாட்டில் நவம்பர் 11-ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.இதனைத் தொடர்ந்து நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகியான ஜோனிடா காந்தியும் கலந்துகொண்டுள்ளார். அனிருத் மற்றும் காவ்யா மாறனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர்,’Congrats to the sweetest newlyweds’என்று குறிப்பிட்டு தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்குக் காரணம், கடந்த காலங்களில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியதுதான். இருவரும் இணைந்து பல வெற்றிப் பாடல்களில் பணியாற்றியதுடன்,அவர்களது நட்பும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது.குறிப்பாக,’பீஸ்ட்’படத்தின் அரபிக் குத்து,’டாக்டர்’படத்தின் செல்லம்மா, ‘டான்’ படத்தின் பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில்,அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிடா பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.பழைய வதந்திகளுக்கு இந்தப் போட்டோ முற்றுப்புள்ளி வைத்ததாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




